தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 25, 2019 10:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2019 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜன.26 தை 12: வாஸ்து நாள், மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:41 - 11:17 மணி, கூரத்தாழ்வார் திருநட்சத்திரம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.

ஜன.27 தை 13: முகூர்த்தநாள், கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கருடசேவை.

ஜன.28 தை 14: சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருமஞ்சனம்.

ஜன.29 தை 15: திருநீலகண்ட நாயனார், தாயுமானவர் குருபூஜை, சுவாமிமலை முருகன் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பரங்குன்றம் முருகன், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

ஜன.30 தை 16: முகூர்த்த நாள், திரைலோக்ய கவுரி விரதம், திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

ஜன.31 தை 17: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், திருவள்ளூர் வீரராகவர் சிம்ம வாகனம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், கரிநாள்.

பிப்.1 தை 18: முகூர்த்தநாள், திருவள்ளூர் வீரராகவர் அம்ச வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித்தாயார் திருமஞ்சனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us