
டிசம்பர் 20, மார்கழி 4: சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் பவனி, திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை பவனி, திருத்தணி முருகன் கிளி வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம்
டிசம்பர் 21, மார்கழி 5: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை, அகோபில மடம் 4வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்
டிசம்பர் 22, மார்கழி 6: ஏகாதசி விரதம், மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை, ஸ்ரீரங்கம் பெருமாள் அலங்காரத் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம், அன்னை சாரதாதேவியார் பிறந்தநாள், கரிநாள்
டிசம்பர் 23, மார்கழி 7: பிரதோஷம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், சிவாலயங்களில் மாலை நந்தீஸ்வரர் அபிஷேகம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி, திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்
டிசம்பர் 24, மார்கழி 8: மாத சிவராத்திரி, சுவாமி மலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்
டிசம்பர் 25, மார்கழி 9: அனுமன் ஜெயந்தி, அமாவாசை விரதம், தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியநம்பி திருநட்சத்திரம், நாமக்கல், சுசீந்திரம் ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேகம், திருகண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை, ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா, கரிநாள்
டிசம்பர் 26, மார்கழி 10: மதுரை கூடலழகர் கிழி விலாசம் எழுந்தருளி கருட வாகனத்தில் பரத்துவ நிர்ணயம், ஸ்ரீரங்கம் பெருமாள் திருநெடுந்தாண்டகம், பெருஞ்சேரி வாகீஸ்வரர், ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் பவனி, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமி மலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்