ஜூன் 5, வைகாசி 23: பவுர்ணமி விரதம், சந்திரன் வழிபாட்டு நாள், அம்பிகைக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல், காஞ்சிப்பெரியவர் பிறந்த தினம், துவாதபட்டர், ராமபிள்ளை பட்டர் திருநட்சத்திரம்
ஜூன் 6, வைகாசி 24: அகோபில மடம் 35வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், திருவரங்கப்பெருமாள் அரையர் திருநட்சத்திரம், சனீஸ்வரர் வழிபாட்டு நாள், குச்சனுார், திருநள்ளாறு கோயில்களில் சனீஸ்வரர் சிறப்பு வழிபாடு
ஜூன் 7, வைகாசி 25: முகூர்த்த நாள், திருஞான சம்பந்தர், திருநீலக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், குமரகுருபர சுவாமிகள் குருபூஜை, சூரிய வழிபாட்டுநாள், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
ஜூன் 8, வைகாசி 26: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம், சிவன் வழிபாட்டு நாள், சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடி சிவனை வழிபடுதல்
ஜூன் 9, வைகாசி 27: சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயகருக்கு விரதமிருந்து அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல்
ஜூன் 10, வைகாசி 28: முகூர்த்த நாள், திருவோண விரதம், பெருமாளுக்கு விரதமிருந்து துளசி மாலை சாத்தி வழிபடுதல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் கல்வெங்கடேசருக்கு திருமஞ்சனம்
ஜூன் 11, வைகாசி 29: முகூர்த்த நாள், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கிசேவை, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம், அகோபிலமடம் 27 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்