
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீசேஷசைல ஸுநிகேதன திவ்ய மூர்த்தே
நாராயணாச்யுத ஹரே நளிநாயதாக்ஷ!
லீலாகடாக்ஷ பரிரக்ஷித ஸர்வலோக
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்!!
பொருள்
ஏழுமலையான சேஷாசலத்தில் குடி கொண்டிருப்பவரே! அழகில் சிறந்தவரே! நாராயண மூர்த்தியே! அச்சுதன், ஹரி என்னும் பெயர் கொண்டவரே! தாமரைக் கண்களைக் உடையவரே! கடைக்கண் பார்வையால் எல்லா உலகங்களையும் காப்பவரே! வெங்கடேசப் பெருமானே! எனக்கு கை கொடுத்து காத்தருள வேண்டும்.