
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
பொருள்
புதர் போல மண்டிக் கிடக்கும் தீவினைகளைப் போக்கியருளும் திருமாலே! உயர்ந்து நிற்கும் மலையில் வாழும் வெங்கடேசப் பெருமாளே! உன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வானுலக தேவர்கள், தேவலோக மகளிர் ஏறிச் செல்லும் படியாகக் கிடந்து, உன் சிவந்த வாய் அழகினைக் கண்டு மகிழ்வேன்.