ஜூன் 26, ஆனி 12: சஷ்டி விரதம், ராமநாதபுரம் கோதண்டராமர் கருட வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்சம், அம்மன் கமல வாகனம், மதுரை மீனாட்சி ஊஞ்சல், திருக்கோளக்குடி, ஆவுடையார் கோவில் சிவன் பவனி.
ஜூன் 27, ஆனி 13: நடராஜர் ஆனி உத்திர அபிஷேகம், ராமநாதபுரம் கோதண்டராமர் சஷே வாகனம், சிதம்பரம், ஆவுடையார்கோவில் சிவன் தேர், கண்டதேவி சிவன் பவனி, குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை
ஜூன் 28, ஆனி 14: சிவாலயங்களில் ஆனி உத்திர தரிசனம், ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம், திருநெல்வேலி நெல்லையப்பர் குதிரை, காந்திமதி காமதேனு வாகனம், மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஊஞ்சல் உற்ஸவம், சாத்துார் வெங்கடேசப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், திருக்கோளக்குடி சிவன் திருக்கல்யாணம்,
ஜூன் 29, ஆனி 15; உபேந்திர நவமி, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி வெள்ளி ரிஷப சேவை, ராமநாதபுரம் கோதண்டராமர் பூப்பல்லக்கு, திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், திருவாழியாழ்வான் திருநட்சத்திரம்
ஜூன் 30, ஆனி 16: ராமநாதபுரம் கோதண்டராமர் குதிரை வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர் யானை வாகனம், காந்திமதியம்மன் அன்ன வாகனம், வீரவநல்லுார் பூமிநாதசுவாமி தெப்பம், பெரியாழ்வார் திருநட்சத்திரம்
ஜூலை 1, ஆனி 17: ஏகாதசி விரதம், கோபத்ம விரதம் ஆரம்பம், ராமநாதபுரம் கோதண்டராமர் தேர், திருநெல்வேலி நெல்லையப்பர் தங்க பல்லக்கு, காந்திமதி தவழும் திருக்கோலம், திருத்தங்கல் நின்றநாராயணப் பெருமாள் சந்திர பிரபையில் பவனி, கானாடுகாத்தான் சிவன் திருக்கல்யாணம், திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் சந்தன மண்டபத்தில் அலங்கார திருமஞ்சனம்,
ஜூலை 2, ஆனி 18: முகூர்த்த நாள், வாசுதேவ துவாதசி, பிரதோஷம், திருநெல்வேலி நெல்லையப்பர் கைலாச பர்வத வாகனம், அம்மன் தங்க கிளி வாகனம், திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் சிவன் கோயில்களில் தேர், நாதமுனிகள் திருநட்சத்திரம்