ஜூலை 31, ஆடி 16: வரலட்சுமி விரதம், லட்சுமி தாயாருக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் படைத்து வழிபடுதல், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிறப்பு வழிபாடு, அழகர்கோவில் கள்ளழகர் காளிங்க நர்த்தன கோலம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தானம் எழுந்தருளல்
ஆக.1, ஆடி 17: மகா பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம், சங்கரன்கோவில் கோமதியம்மன் சிறப்பு வழிபாடு, அழகர்கோவில் கள்ளழகர் சூர்ணோற்ஸவம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம்
ஆக.2, ஆடி 18: ஆடிப்பெருக்கு, நதிக்கரைகளில் புனித நீராடல், ஆடித்தபசு, சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசுக்காட்சி, அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் வெண்ணெய்தாழிசேவை, அகோபில மடம் 14வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம் பட்டினத்தார் குருபூஜை, ஆளவந்தார் திருநட்சத்திரம்
ஆக.3, ஆடி 19: பவுர்ணமி, ஆவணி அவிட்டம், ரிக், யஜுர் உபாகர்மம், திருவோண விரதம், பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல், கீழ்த்திருப்பதி கல்வெங்கடேசர் திருமஞ்சனம், தெற்காழ்வான் திருநட்சத்திரம்
ஆக.4, ஆடி 20: காயத்ரி ஜபம், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு, உருள் தாண்டவக் காட்சி, அழகர்கோவில் சுந்தர்ராஜப்பெருமாள் தீர்த்தவாரி, சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், கரிநாள்
ஆக.5, ஆடி 21: சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்
ஆக.6, ஆடி 22: சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயிலில் ராமர் திருமஞ்சனம்