
ஜூலை 9, ஆனி 25: அமாவாசை விரதம் ஆவுடையார் கோவில் சிவன் புறப்பாடு திருவண்ணாமலை சிவன் வீதியுலா திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தெப்பம் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், அகோபில மடம் 9வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
ஜூலை 10, ஆனி 26: சிதம்பரம் ஆவுடையார் கோவில் சிவபெருமான் ரிஷப சேவை, திருவையாறு பஞ்சநதீஸ்வரர் புறப்பாடு திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தெப்பம், ராமநாதபுரம் கோதண்டராமர் உற்ஸவம் ஆரம்பம், தோளுக்கினியானில் பவனி, பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம்
ஜூலை 11, ஆனி 27: சந்திர தரிசனம் அமிர்த லட்சுமி விரதம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தெப்பம், ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனம், திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் அனுமன் திருமஞ்சனம், சிதம்பரம் நடராஜர் பவனி
ஜூலை 12, ஆனி 28: மதுரை மீனாட்சி முளைகொட்டுத்திருவிழா, ராமநாதபுரம் கோதண்டராமர் அனுமன் வாகனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் ரிஷப சேவை, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருமஞ்சனம்
ஜூலை 13, ஆனி 29: சதுர்த்தி விரதம் சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்ஸவம் ஆரம்பம், தங்கச்சப்பரத்தில் பவனி மதுரை மீனாட்சி வெள்ளி அன்னவாகனம் ராமநாதபுரம் கோதண்டராமர் கருட வாகனம், சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, மாணிக்கவாசகர் குருபூஜை
ஜூலை 14, ஆனி 30: சமீகவுரி விரதம், ஆனி உத்திர அபிேஷகம் சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம், சகல சிவன் கோயில்களில் ஆனி உத்திர அபிேஷகம் சிதம்பரம், ஆவுடையார் கோவில் நடராஜர் தேர், ராமநாதபுரம் கோதண்டராமர் சேஷ வாகனம், தேவகோட்டை ரங்கநாதர் பவனி, மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி, அமர்நீதி நாயனார் குருபூஜை
ஜூலை 15, ஆனி 31: சஷ்டி விரதம் குமார சஷ்டி, ஆனி உத்திர தரிசனம், மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி யானை வாகனம் சங்கரன் கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனம், ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனம்

