
ஜூலை 16, ஆனி 32: முகூர்த்த நாள், சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனம், ராமநாதபுரம் கோதண்ட ராமர் இந்திர விமானம், இரவு புஷ்ப பல்லக்கு, அழகர்கோவில் கள்ளழகர், வடமதுரை சவுந்தரராஜர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், மதுரை மீனாட்சியம்மன் ரிஷப சேவை, திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு
ஜூலை 17, ஆடி 1: தட்சிணாயன புண்ணிய காலம், மதுரை மீனாட்சியம்மன் கிளி வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரம், அழகர்கோவில் கள்ளழகர் கிருஷ்ணாவதார காட்சி, வடமதுரை சவுந்தரராஜர் அன்ன வாகனம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு, திருவண்ணாமலை அண்ணாமலையார் பவனி
ஜூலை 18, ஆடி 2: உபேந்திர நவமி, சங்கரன்கோவில் கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி, ராமநாதபுரம் கோதண்ட ராமர் தேர், அழகர்கோவில் கள்ளழகர் ராமாவதார காட்சி, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு, வடமதுரை சவுந்தரராஜர் சிம்ம வாகனம், மதுரை மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கு, கரிநாள்
ஜூலை 19, ஆடி 3: மதுரை மீனாட்சியம்மன் தங்க குதிரை வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பல்லக்கு, அழகர்கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்ச லீலை, வடமதுரை சவுந்தரராஜர் கருடவாகனம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வீதியுலா
ஜூலை 20, ஆடி 4: ஏகாதசி விரதம், கோபத்ம விரதம் ஆரம்பம், கோவர்த்தன விரதம், மதுரை மீனாட்சியம்மன் சட்டத்தேர், நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி, சங்கரன் கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம், அழகர்கோவில் கள்ளழகர் ராஜாங்க சேவை, வடமதுரை சவுந்தரராஜர் சஷே வாகனம், ஸ்ரீரங்கம் பெருமாள் திருமஞ்சனம்
ஜூலை 21, ஆடி 5: வாசுதேவ துவாதசி, பிரதோஷம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தேர், அழகர்கோவில் கள்ளழகர் காளிங்க நர்த்தனம், வடமதுரை சவுந்தரராஜர் யானை வாகனம், திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை
ஜூலை 22, ஆடி 6: சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப சேவை, அழகர்கோவில் கள்ளழகர் சூர்ணோற்ஸவம், வடமதுரை சவுந்தரராஜர் திருக்கல்யாணம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமர் திருமஞ்சனம்

