ADDED : அக் 29, 2021 05:02 PM

அக்.29, ஐப்பசி 12: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், திருத்தணி முருகன் கிளி வாகன சேவை
அக்.30, ஐப்பசி 13: திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருமஞ்சனம், உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு, குச்சனுார் சனிபகவான் சிறப்பு அபிேஷகம், திருநெல்வேலி காந்திமதியம்மன் சிவபூஜை செய்தருளல்
அக்.31, ஐப்பசி 14: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் அனுமன் திருமஞ்சனம், திருநெல்வேலி காந்திமதியம்மன் தங்கச் சப்பரத்தில் தபசுக்காட்சி
நவ.1, ஐப்பசி 15: திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், சாத்துார் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கல்யாணம்
நவ.2, ஐப்பசி 16: பிரதோஷம், வள்ளியூர் முருகன் உற்ஸவம் ஆரம்பம், வெள்ளி மயில் வாகனம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளுல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், சிவன் கோயில்களில் நந்தீஸ்வரர் அபிஷேகம், திருநெல்வேலி நெல்லையப்பர் பட்டினப்பிரவேசம்.
நவ.3, ஐப்பசி 17: மாத சிவராத்திரி, நரக சதுர்த்தசி ஸ்நானம், வள்ளியூர் முருகன் கலைமான் வாகனம், உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாமி சந்திரசேகரர் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்
நவ.4, ஐப்பசி 18: தீபாவளி, கேதார கவுரி விரதம், கந்தசஷ்டி விரதம் ஆரம்பம், சிக்கல் சிங்கார வேலவர், குமார வயலுார் முருகன் உற்ஸவம் ஆரம்பம், வள்ளியூர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் பச்சைமயில் வாகனம், மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாற்றுதல், திருநெல்வேலி காந்திமதியம்மன் ஊஞ்சல், மெய்கண்டார் குருபூஜை
