தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஏப் 21, 2022 01:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2022 01:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்.15, சித்திரை 2: சுபமுகூர்த்தம், மதன சதுர்த்தசி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேர், திருப்புத்துார் ஜயந்தன் பூஜை, அழகர் கோவில் கள்ளழகர் எதிர்சேவை, சமயபுரம் மாரியம்மன் யானை வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர் திருமஞ்சனம், பாபநாசம் சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனம், புனிதவெள்ளி, இன்று செடி, கொடி வைக்க நல்ல நாள்.

ஏப்.16, சித்திரை 3: சித்ரா பவுர்ணமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி ரிஷப வாகனம், அழகர்கோவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், இரவு வண்டியூரில் வாணவேடிக்கை, சமயபுரம் மாரியம்மன் ஹம்ச வாகனம், பழநி முருகன் வெள்ளி ரதம், உத்தமர்கோவில் புருஷோத்தமப் பெருமாள் தேர், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புன்னை மர வாகனம், சென்னை சென்னகேசவப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், விழுப்புரம் திருநங்கைகள் திருவிழா.

ஏப்.17, சித்திரை 4: அழகர்கோவில் கள்ளழகர் கருட வாகனம், இரவு தசாவதாரக் காட்சி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பம், சமயபுரம் மாரியம்மன் குதிரை வாகனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பரமபத நாதர் திருக்கோலம், சென்னை கேசவப்பெருமாள் ஹம்ச வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு, திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் குருபூஜை.

ஏப்.18, சித்திரை 5: அழகர்கோவில் கள்ளழகர் மோகன அவதாரம், இரவு புஷ்பப் பல்லக்கு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி.

ஏப்.19, சித்திரை 6: சங்கடஹர சதுர்த்தி விரதம், அழகர்கோவில் கள்ளழகர் மலைக்கு எழுந்தருளல், சமயபுரம் மாரியம்மன் தேர், கோவை தண்டு மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், ஊட்டி மாரியம்மன் தேர், சென்னை சென்னகேசவப் பெருமாள் காலை சூரியபிரபை, இரவு சேஷ வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபையில் பவனி, கரிநாள்.

ஏப்.20, சித்திரை 7: வராக ஜெயந்தி, செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம், சென்னை சென்னகேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஹனுமந்த வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்.

ஏப்.21, சித்திரை 8: சுபமுகூர்த்தம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இரவு புண்ணியகோடி விமானத்தில் பவனி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us