
ஜன. 6 மார்கழி 22: பவுர்ணமி, வடசாவித்திரி விரதம். சகல சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், கும்பகோணம் சக்கரபாணி, ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி பெருமாள் தலங்களில் ராப்பத்து உற்ஸவ சேவை. சடையநாயனார் குருபூஜை.
ஜன.7 மார்கழி 23: மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இத்தலங்களில் திருவாய்மொழி உற்ஸவ சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. குச்சனுார் சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
ஜன.8 மார்கழி 24: ஸ்ரீ வைகுண்டம், திருவரகுணமங்கை இத்தலங்களில் எம்பெருமானுக்கு ராப்பத்து உற்ஸவ ஸேவை. திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. சூரிய வழிபாடு ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று.
ஜன.9 மார்கழி 25: சங்கரன்கோவில் கோமதியம்பாள் புஷ்ப பாவாடை தரிசனம். குடந்தை சாரங்கபாணி, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் இத்தலங்களில் திருவாய்மொழி உற்ஸவசேவை.
ஜன. 10 மார்கழி 26: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் விரதம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மதுரை கூடலழகர் இத்தலங்களில் ராப்பத்து உற்ஸவ சேவை. சுவாமிமலை முருகப்பெருமானுக்கு தங்கப்பூமாலை சூடியருளல்.
ஜன.11 மார்கழி 27: திருவையாறு சங்கீத மூர்த்தி தியாக பிரம்மம் ஆராதனை. திருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
ஜன. 12 மார்கழி 28: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் இரவு தங்க ஹம்ச வாகனத்தில் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமயம் ஆண்டாள் புறப்பாடு. பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு. இயற்பகை நாயனார் பூஜை.

