sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜன 12, 2023 12:16 PM

Google News

ADDED : ஜன 12, 2023 12:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'கர்மாவே பெரிது, கடவுள் இல்லை' என்று கூறினர் சில முனிவர்கள். அவர்களது ஆணவத்தை அழிக்க நினைத்தார் சிவபெருமான். தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக காட்சி தந்தார். இதுதான் மார்கழித் திருவாதிரை.

* 'திரு' என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை, ஓணம் நட்சத்திரங்கள். இவற்றுள் திருவோணம் பெருமாளுக்கும், திருவாதிரை நடராஜருக்கும் உரியது.

* நடராஜருக்கு வருடத்தில் ஆறு முறை சிறப்பு அபிேஷகம் நடக்கும்.

1. சித்திரை திருவோணம்

2. ஆனி உத்திரம்

3. மார்கழி திருவாதிரை,

4. ஆவணி வளர்பிறை சதுர்த்தசி

5. புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி

6. மாசி வளர்பிறை சதுர்த்தசி

* ஆருத்ரா தரிசனம் அன்று களி, கூட்டு செய்து நடராஜருக்கு நைவேத்தியம்

செய்யலாம்.

* திருவாதிரை விரதம் இருப்பவர்கள் மார்கழி திருவாதிரையில் விரதத்தை தொடங்க வேண்டும். இப்படி ஒவ்வொரு திருவாதிரையன்று விரதம் இருந்து, ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யலாம்.

* பிரபஞ்ச இயக்கத்துக்குக் காரணமான சிவபெருமானின் ஐந்தொழில்களையும் வெளிப்படுத்தும் கோலம் நடராஜ திருவடிவம்.

* ஆருத்ரா நாளில் தொடங்கப்படும் எந்த முயற்சியும் சிக்கலின்றி நிறைவேறும். இந்நாளில் சேரும் செல்வம் மேலும் மேலும் பெருகும்.






      Dinamalar
      Follow us