sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சிதம்பரத்திற்கு இத்தனை பெயர்களா...

/

சிதம்பரத்திற்கு இத்தனை பெயர்களா...

சிதம்பரத்திற்கு இத்தனை பெயர்களா...

சிதம்பரத்திற்கு இத்தனை பெயர்களா...


ADDED : ஜன 12, 2023 12:11 PM

Google News

ADDED : ஜன 12, 2023 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் என்றால் சிதம்பரத்தை குறிக்கும். அங்கு மூலவரும், உற்ஸவரும் ஒருவரே. சிதம்பரத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவற்றை காண்போமா...

கோயில் - சிவபெருமான் மீது நாயன்மார்கள் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களில் இடம் பெற்றுள்ளது.

பெரும்பற்றப்புலியூர் - புலிக்கால் முனிவர் இங்கு பூஜை செய்ததால் இப்பெயர் வந்தது.

தில்லை - தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் தில்லை என்று பெயர். (இம்மரங்கள் தற்போது அருகிலுள்ள பிச்சாவரத்தில் காணப்படுகின்றன)

திருமூலட்டானம் - எல்லா கோயில்களில் அர்த்தஜாம வழிபாடு முடிந்த பின், அக்கோயிலின் ஆற்றல் அனைத்தும் சிதம்பரத்திற்கு வந்து சேரும். அதனால் திருமூலட்டானம் என்பர்.

சிற்றம்பலம் - நடராஜர் நடனமாடும் சபையை 'சித்சபை' என்பர். சித் என்றால் ஞானம். சித்சபையை சிற்றம்பலம் என அழைப்பர். அம்பலம் என்றால் மேடை. சிற்றம்பலம் என்ற பெயரே மருவி சிதம்பரம் என பெயர் பெற்றது.

பொன்னம்பலம் - பராந்தகசோழன் பொன் வேய்ந்ததால் பொன்னம்பலம் என்பர்.

பூலோக கைலாயம் - பக்தர்கள் இக்கோயிலை 'பூலோக கைலாயம்' என போற்றுவர்.

ஆகாயத்தலம் - பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக உள்ளது.

இருதய தலம் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரம், திருவானைக்காவல் உந்தி, திருவண்ணாமலை மணிபூரகம், திருக்காளத்தி கழுத்து, காசி புருவமத்தி, சிதம்பரம் இருதய தலமாகவும் போற்றப்படுகின்றன.






      Dinamalar
      Follow us