
பிப். 3 தை 20: முகூர்த்த நாள், திருவாதிரை, பிரதோஷம். கோயம்புத்துார் பாலதண்டயுதபாணி மயில் வாகனம். குன்றக்குடி முருகன் வெள்ளி தேர். சகல சிவன்கோயில்களில் நந்தீஸ்வரருக்கு வழிபாடு.
பிப். 4 தை 21: குன்றக்குடி, திருப்புடைமருதுார், திருவிடைமருதுார், தலங்களில் தேர். சேந்தனார் குருபூஜை. மதுரை மீனாட்சி சொக்கநாதர் குதிரையில், அம்பாள் வெள்ளி சிம்மாசனத்தில் வண்டியூருக்கு எழுந்தருளல்.
பிப். 5 தை 22: தைப்பூசம். வடலுார் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். கோயம்புத்துார் பாலதண்டாயுதபாணி, மருதமலை முருகன்,திருச்சேறை சாரநாதர் தலங்களில் தேர். காஞ்சிபுரம் பெருந்தேவி, சென்னை மயிலாப்பூர், திருவானைக்காவல் தலங்களில் தெப்பம்
பிப். 6 தை 23: சங்கரன்கோயில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமார சுவாமிபவனி. சென்னிமலை சுப்பிரமணியர் தேர்.
பிப். 7 தை 24: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.
பிப். 8 தை 25: சென்னிமலை சுப்பிரமணியர் தெப்பம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
பிப். 9 தை 26: சங்கடஹர சதுர்த்தி, கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம். களக்காடு சத்தியவாகீஸ்வரர் தெப்பம். சுவாமி மலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம். சண்டிகேஸ்வர நாயனார் குருபூஜை.

