sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஏப் 06, 2023 12:20 PM

Google News

ADDED : ஏப் 06, 2023 12:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 31 பங்குனி 17: தர்மராஜ தசமி, மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கல்யாணம். திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி. கழுகுமலை முருகன் வெள்ளி சப்பரத்தில் புறப்பாடு. முனையடுவார் குருபூஜை.

ஏப். 1 பங்குனி 18: புதுக்கணக்கு தொடங்கும் நாள்,(காலை 7:31 - 9:00 மணி) ஏகாதசி விரதம். திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் காலை புன்னை மர வாகனம். இரவு சேஷ வாகனம். திருச்சுழி திருமேனி நாதர் காலையில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். இரவு சமணர்களுக்கு ரிஷப வாகனத்தில் காட்சி.

ஏப். 2 பங்குனி 19: சென்னை வடபழநி முருகன் தெப்பம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் தேர். ஒழுகைமங்கலம் முத்து மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம். கரிநாள்

ஏப். 3 பங்குனி 20: பிரதோஷம். சங்கரன்கோவில் கோமதியம்பாள் புஷ்ப பாவாடை தரிசனம். கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ணநாதர் கோயில் உற்ஸவம் ஆரம்பம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் காலை பூம்பாவையை உயிர்ப்பித்து அருளல். இரவு அறுபத்து மூவருடன் பவனி.

பரமக்குடி முத்தாலம்மன் காமதேனு வாகனம்.

ஏப். 4 பங்குனி 21: திருச்சி தாயுமானவர் தெப்பம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் குதிரை வாகனம். திருவாரூர் தியாகராஜர் நடனக்காட்சி. பழநி, கழுகுமலை முருகன்,கங்கை கொண்டான் வைகுண்டபதி தலங்களில் தேர்.

ஏப். 5 பங்குனி 22: பங்குனி உத்திரம், பவுர்ணமி. அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி. கோவில்பட்டி பூவணநாதர், குற்றாலம் குற்றாலநாதர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். ரெங்கநாச்சியார் திருநட்சத்திரம்.

ஏப். 6 பங்குனி 23: மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று வைபவம். ராமகிரி கல்யாண வெங்கடேசப்பெருமாள், தாயமங்கலம் முத்துமாரியம்மன் தேர். திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனம். வீரபாகு குதிரை வாகனம்.






      Dinamalar
      Follow us