
மே 19 வைகாசி 5: சர்வ அமாவாசை. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளல். திருத்தணி முருகன் கிளி வாகனம். திருக்கண்ணபுரம் சவுரி ராஜப்பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
மே 20 வைகாசி 6: திருநள்ளாறு, குச்சனுார், இலத்துார் தலங்களில் சனிஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் வரதராஜப்பெருமாளுக்கு திருமஞ்சனம்.
மே 21 வைகாசி 7: சந்திர தரிசனம். சிவகாசி விஸ்வநாதர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு எதிரே உள்ள அனுமனுக்கு திருமஞ்சனம். கரிநாள்.
மே 22 வைகாசி 8 : முகூர்த்த நாள். மதுரை சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் உற்ஸவம் ஆரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
மே 23 வைகாசி 9 : சுவாமிமலை முருகப்பெருமானுக்கு தங்கமாலை சூட்டியருளல். மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு. தேரெழுந்துார் ஞானசம்பந்தர், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவர் புறப்பாடு.
மே 24 வைகாசி 10 : முகூர்த்த நாள். மாயவரம் மாயூரநாதர், நயினார் கோவில் நாகநாதர். திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர், திருப்புகலுார் அக்னீஸ்வரர், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தலங்களில் உற்ஸவாரம்பம். நம்பியாண்டார் நம்பி குருபூஜை. செடி கொடி வைக்க நன்று.
மே 25 வைகாசி 11: முகூர்த்த நாள். நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி உற்ஸவம் ஆரம்பம். உத்தமர் கோயில் சிவபெருமான் புறப்பாடு. நமிநந்தியடிகள், சேக்கிழார் சுவாமிகள் குருபூஜை. மா, பலா, வாழை, தென்னை வைக்க நன்று.

