
* தேவைகளை குறைத்துக்கொள். நிம்மதி தானாகவே வந்துவிடும்.
* தேங்கும் பணம் வளர வளர வாழ்வைக் கெடுக்கும்.
* எதற்கெடுத்தாலும் பயப்படாதே. மீறினால் அதுவே கவலையை உண்டாக்கும்.
* தவறு செய்வது இயல்பு. ஆனால் அது மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்.
* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு.
* எந்த நிலையிலும் யார் கோபப்படவில்லையோ, அவர் ஞானி.
* நேர்மையும், உண்மையும் கொண்டவர்களுக்கு வரும் துன்பம் தற்காலிகமானதே.
* தீராத பிரச்னை என்று எதுவும் இல்லை. தீர்க்கும் வழியை அறிவது தான் பிரச்னை.
* வாழ்த்தும் போது நம்மைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும்.
* நல்வழியில் அறிவைச் செலுத்தி உழைத்தால் வாழ்க்கையில் உயர்வடைவாய்.
* உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம் இவை நல்லோர் பண்பு.
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என்பதே உத்தமர் இயல்பு.
* பணத்திற்கும் பண்பிற்கும் நடக்கும் போட்டியில், பண்பை காப்பாற்ற உறுதி வேண்டும்.
* யாரிடமும் பகை இல்லாமல் இரு. அது உலகையே உன் வசப்படுத்தி விடும்.
என்கிறார் வேதாத்ரி

