
செப்.15 ஆவணி 29: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். சோழவந்தான் ஜெனகை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். மறைஞான சம்பந்தர் குருபூஜை.
செப்.16 ஆவணி 30: சந்திர தரிசனம். கல்கி ஜெயந்தி. அஹோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் திருமஞ்சனம்.
செப்.17 ஆவணி 31: முகூர்த்த நாள். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள், கரூர் தான் தோன்றி கல்யாண வேங்கடேசப்பெருமாள் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். இன்று செடி கொடி வைக்க நன்று.
செப்.18 புரட்டாசி 1: விநாயகர் சதுர்த்தி. ஷடசீதி புண்ணியகாலம். சகல சிவன் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு.
செப்.19 புரட்டாசி 2: மகாலட்சுமி விரதம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு.
செப்.20 புரட்டாசி 3: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி. திருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பகவிருட்ஷம், மாலை ஸர்வ பூபால வாகனத்தில் பவனி.
செப்.21 புரட்டாசி 4: சஷ்டி விரதம். நாட்டரசன் கோட்டை, குணசீலம் தலங்களில் நம்பெருமான் புறப்பாடு.