sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

குழந்தைகள் படிப்பில் சிறக்க...

/

குழந்தைகள் படிப்பில் சிறக்க...

குழந்தைகள் படிப்பில் சிறக்க...

குழந்தைகள் படிப்பில் சிறக்க...


ADDED : செப் 19, 2023 12:40 PM

Google News

ADDED : செப் 19, 2023 12:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகர் முன் கீழ்கண்ட பாடல்களை பாடுங்கள்.

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகணபதி வர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.

-திருஞானசம்பந்தர்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

-திருமூலர்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் படுமின் கனிந்து

-கபிலர்

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்

நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்

தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள்முடிக்

கடக்களிற்றை கருத்துள் இருத்துவாம்.

-தெய்வச்சேக்கிழார்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் துாமணியே நீ எனக்கு

சங்கத்தமிழ் மூன்றும் தா.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம், மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

-அவ்வையார்






      Dinamalar
      Follow us