sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : செப் 19, 2023 12:32 PM

Google News

ADDED : செப் 19, 2023 12:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகப்பெருமானுக்கு பல பெயர்கள் இருந்தாலும் அதில் பதினாறு பெயர்கள் முக்கியமானவை. இதை 'ஷோடச நாமா' என சொல்வர்.

1. ஸுமுகர்: 'ஸு'முகம் என்றால் நல்ல முகம். அன்பும் ஆனந்தமும் பொங்குவதுதான் நல்ல முகம். மனதில் உள்ளதை அப்படியே வெளிக்காட்டுபவர்.

2. ஏகதந்தர்: இதற்கு ஒரே தந்தம் உடையவர் என்று அர்த்தம். வியாஸர் மகாபாரதம் சொல்லும்போது அதை எழுத எழுத்தாணி வேண்டும். அதை தேட நேரம் இல்லாததால் தனது வலது தந்தத்தை ஒடித்து எழுதினார்.

3. கபிலர்: இதற்கு பழுப்புச் சிவப்பு நிறமாக இருப்பர் என்று பொருள்.

4. கஜகர்ணகர்: 'யானைக் காது உள்ளவர்' என்று அர்த்தம். இவர் கஜமுகர் (யானையின் முகம்) கொண்டவர் மட்டுமல்ல. யானைக்காதும் உடையவர்.

5. லம்போதரர்: 'தொங்குகிற வயிற்றுக்காரர்' என்று அர்த்தம். (லம்பம் - தொங்குவது, உதரம் - வயிறு). தானே முழுமையானவர் என்று காட்டத்தான் பானை வயிறோடு இருக்கிறார்.

6. விகடர்: பிறரை சிரிக்க வைக்க நகைச்சுவையாக செய்யும் செயல்களை 'விகடம்' என்போம். விநாயகரும் உலக நன்மைக்காக பல விளையாட்டுச் செயல்களை செய்துள்ளார்.

7. விக்நராஜர்: இதற்கு 'விக்நேச்வரர்' என்று அர்த்தம். செயலில் ஏற்படும் விக்னங்களை (தடை) நீக்குபவர்.

8. விநாயகர்: விசேஷம் பொருந்திய நாயகர், சிறப்புப் படைத்த தலைவர். தம்மைத்தாமே விஞ்சிய நாயகராக இவர் இருக்கிறார்.

9. துாமகேது: துாமாஸுரன் என்ற அசுரனை அழித்ததால் இவருக்கு இந்தப்பெயர். இந்த அசுரன் விட்ட விஷப்புகையை உள்வாங்கி, அதை வைத்தே அவரை அழித்தார். இப்படி புகையை ஆயுதமாக கொண்டு வெற்றிபெற்றார்.

10. கணாத்யக்ஷர்: இதை கண + அத்யக்ஷர் என்று பிரிக்கலாம். 'அத்யக்ஷர்' என்றால் தலைவர். சிவபெருமான் தன்னுடைய பூதகணங்களுக்கு அதிபதியாக விநாயகரையும், தேவகணங்களுக்கு அதிபதியாக முருகனையும் வைத்தார்.

11. பாலசந்த்ரர்: இதற்கு 'கேசத்தின் முன் பக்கத்தில் சந்திரனை உடையவன்' என்பது பொருள். சிவபெருமானை போல் விநாயகரும் தன்னை அவமதித்த சந்திரனை தலையில் வைத்துக்கொண்டார்.

12. கஜானனர்: யானை முகர் என்று அர்த்தம். உடல், புத்தி பலம், நினைவுக்கூர்மையக் கொண்டது யானை.

13. வக்ரதுண்டர்: 'வளைந்துள்ள தும்பிக்கை'யை கொண்டவர். வலம்புரியாகத் தும்பிக்கையை வளைத்தால் அதுவே ப்ரணவத்தின் (ஓம்) வடிவம்.

14. சூர்ப்பகர்ணர்: முறம் (சூர்ப்பம்) போன்ற காதுகளை உடையவர். நமது வேண்டுதலை அவர் கேட்டுக்கொண்டாலும் அவற்றில் தள்ள வேண்டியதை தள்ளிவிட்டு, ஏற்க வேண்டியதை மட்டும் காதில் வாங்குவார். இதனால் இவருக்கு சூர்ப்பகர்ணர், முறக்காதர் என்ற பெயர் வந்தது.

15. ஹேரம்பர்: பாஸ்கரராயர் என்ற பண்டிதர் தனது 'கணேச ஸஹஸ்ர நாமத்தில்' ஹேரம்பர் என்பதற்கு, 'சைவ தந்த்ர ப்ரவர்த்தகர்' என குறிப்பிடுகிறார். இதற்கு சைவ ஆகமத்தைத் தோற்றுவித்தவர் என்று பொருள்.

16. ஸ்கந்தபூர்வஜர்: ஸ்கந்தர் - முருகப்பெருமான், பூர்வஜர் - முன்னால் பிறந்தவர் என்று பொருள். முருகப்பெருமானுக்கு மூத்தவர் விநாயகர். இந்த பதினாறு பெயர்களை கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.

ஸுமுகச் - சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:

லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:

துாமகேதுர் - கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜாநந:

வக்ரதுண்ட: சூர்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:






      Dinamalar
      Follow us