ADDED : செப் 19, 2023 12:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓம் அருள் வடிவுடையாய் போற்றி
ஓம் ஆன்மிகம் வளர்ப்பாய் போற்றி
ஓம் இகபரம் அருள்வாய் போற்றி
ஓம் ஈடிணை இலதாய் போற்றி
ஓம் உண்மையாய் ஒளிர்வாய் போற்றி
ஓம் ஊக்கம் ஊட்டிடுவாய் போற்றி
ஓம் எண்ணெழுத்து ஆனாய் போற்றி
ஓம் ஏகநாயகனே போற்றி
ஓம் ஐங்கர மூர்த்தியே போற்றி
ஓம் ஒலி முதல் முடிவே போற்றி
ஓம் ஓங்காரத்து உருவே போற்றி
ஓம் ஒளவைக்கு அருளியவா போற்றி
ஓம் கணங்களின் பதியே போற்றி
ஓம் சக்தி மிக் கீவாய் போற்றி
ஓம் தவ நிறை அருளே போற்றி
ஓம் பரிபூரண பொருளே போற்றி