sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கடவுளின் பிள்ளைகள் யார்?

/

கடவுளின் பிள்ளைகள் யார்?

கடவுளின் பிள்ளைகள் யார்?

கடவுளின் பிள்ளைகள் யார்?


ADDED : அக் 15, 2010 04:45 PM

Google News

ADDED : அக் 15, 2010 04:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்கள் அந்தரங்க எண்ணத்தை கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது <உங்கள் கடமையாகும்.

* அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். அகிம்சை என்ற ஒரு நல்ல குணத்தை நாம் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் தாமாகவே நம்மை வந்தடையும்.

* அகந்தையை அடியோடு ஒழித்துவிடுங்கள். கோப உணர்ச்சி, பேராசை எண்ணங்கள் கிள்ளி எறியுங்கள். அப்போது தான் அகிம்சையை முழுமையாக உங்களால் பின்பற்ற முடியும்.

* பிறர் உங்களை இம்சை செய்தால் அவர்களைப் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்தை அறவே கைவிடுங்கள். அவர் மனம் திருந்தும் படி கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

* பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சத்தியத்தைக் கடைபிடிப்பவன் வாக்சித்தி பெற்றுவிடுவான். அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் தெய்வீகசக்தி பெற்றுவிடும்.

* நல்லொழுக்கம் என்பது வெட்கப்படக்கூடியதையோ, யாரும் விரும்பத்தகாத செயலையோ செய்ய அஞ்சுவதாகும். சமுதாயம் புகழும்படி நல்ல செயல்களை செய்ய முற்படுங்கள்.

* இரக்கம், வாய்மை, அன்பு, தூய்மை, தன்னடக்கம், தைரியம், பொறுமை, நேர்மை, பெருந்தன்மை, பக்தி, அமைதி, பகுத்தறிவு ஆகிய மேன்மையான குணங்களை பின்பற்றுபவர்களே கடவுளின் பிள்ளைகள்  ஆவார்கள். 






      Dinamalar
      Follow us