sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆபத்தில் துணைநின்ற அருளாளர்

/

ஆபத்தில் துணைநின்ற அருளாளர்

ஆபத்தில் துணைநின்ற அருளாளர்

ஆபத்தில் துணைநின்ற அருளாளர்


ADDED : மார் 09, 2023 10:59 AM

Google News

ADDED : மார் 09, 2023 10:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்தவர் சுப்பிரமணியம். 1974ல் கனமழை பெய்ததால் மும்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூன்று நாட்கள் கழித்து மெல்ல இயல்பு நிலை வரத் தொடங்கியது. பேருந்துகளில் கூட்டம் அலைமோதியதால் சுப்பிரமணியம் தன் அலுவலக சகாவுடன் நடந்தே பணிக்கு புறப்பட்டார். மழைநீர் வடியாததால் நடக்க முடியவில்லை.

வழியில் பாட்டியா மருத்துவமனை அருகில் வாடகை டாக்சி ஒன்று நிற்கவே, 'ரிசர்வ் வங்கிக்கு வரலாமா' என அதில் இருந்த டிரைவரிடம் கேட்டனர். நோயாளியுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவருக்காக காத்திருப்பதாகவும் டிரைவர் கூறினார். அந்த நேரத்தில் நோயாளியும் வரவே, அவரது அனுமதியுடன் இருவரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கினர். சிறிது நேரம் கழிந்ததும், டாக்சியில் பணப்பையை மறந்து வைத்ததை அறிந்த சுப்பிரமணியம் பதறினார். காஞ்சி மஹாபெரியவரை மனதார வேண்டினார். அப்போது எலக்ட்ரிக் ஹவுஸ் போவதாக டாக்சி டிரைவர் சொல்லியது நினைவுக்கு வரவே, வாடகை டாக்சி ஒன்றில் எலக்ட்ரிக் ஹவுஸ் நோக்கி புறப்பட்டார். வழியில் அந்த டாக்சி டிரைவர் நிற்பதைக் கண்டு கூவி அழைத்தார். பணப்பை பத்திரமாக தன்னிடம் இருப்பதாக டிரைவர் தெரிவிக்கவே நிம்மதி பெருமூச்சு விட்டார் சுப்பிரமணியம்.

இதே போல காஞ்சி மஹாபெரியவரின் பக்தராக இருந்தவர் ஆனந்த். டூவீலர் ஒன்றை பழுது பார்க்க ஒர்க் ஷாப்பில் விட்டிருந்தார். அதை சரிசெய்த தொழிலாளி சோதனை ஓட்டமாக ஆனந்தை ஏற்றியபடி

புறப்பட்டார். இரும்பு குழாய்களை ஏற்றியபடி எதிரில் வந்த வண்டி ஒன்று டூவீலர் மீது மோதியது. உயிர் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆனந்த் குதித்தார். அப்போது யாரோ கைகளால் தாங்கிப் பிடித்து கீழே விடுவது போல உணர்ந்தார். அவரது மூக்குக் கண்ணாடி கூட விழவில்லை. வலது தோள்பட்டையில் இரும்பு குழாய்கள் பட்டதால் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து நேரும் போது ஆனந்தின் தாயார் மும்பை காளிபாரி என்னுமிடத்தில் முகாமிட்டிருந்த காஞ்சி மஹாபெரியவரிடம் கிரக தோஷத்தால் சிரமப்படும் தன் மகனைக் காக்குமாறு வேண்டியிருக்கிறார். அதன் பலனாக தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது போல உயிருக்கு வந்த ஆபத்தும் நீங்கியதை உணர்ந்து மனம் நெகிழ்ந்தார் ஆனந்த்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com






      Dinamalar
      Follow us