sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

எளியதையும் ஏற்பவன்

/

எளியதையும் ஏற்பவன்

எளியதையும் ஏற்பவன்

எளியதையும் ஏற்பவன்


ADDED : ஜூன் 10, 2013 03:04 PM

Google News

ADDED : ஜூன் 10, 2013 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாளவி என்ற ஊருக்கு ராகவேந்திரர் வந்திருந்தார். பக்தர்கள் வரிசையில் வந்து அவரைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரே ஒரு ஏழை மட்டும் அவர் தங்கியிருந்த இடத்திற்கு வெளியே நின்று, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். இதைக் கவனித்து விட்ட ராகவேந்திரர் அவனை உள்ளே அழைத்து,''ஏனப்பா, அங்கேயே நிற்கிறாய்?'' என்றார்.

''சாமி! நான் தாழ்த்தப்பட்டவன். உங்களைப் போன்றவர்கள் அருகில் வரத் தகுதியில்லாதவன்..''

'பிறப்பில் ஏதப்பா உயர்வு தாழ்வு! சரி..சரி...நான் வழிபடும் ராமர் சிலைக்கு ஏதாவது காணிக்கை கொடுக்கிறாயா?''

''என் வீட்டில் கடுகு மட்டுமே இருக்கிறது. அதைத் தரலாமா?'' என்றவன் அதைக் கொண்டு வந்து கொடுத்தான். அதை ராமருக்கு படைத்தபின் சமையலில் சேர்க்க உத்தரவிட்டார்.

'அந்த மாதம் உணவில் கடுகு சேர்ப்பதில்லையே' என்ற சீடர்களிடம்,''இறைவனுக்கு படைத்த இதைச் சேர்க்கலாம்,'' என்றார். அன்று சீனிவாசாச்சாரியார் என்ற பண்டிதர் வந்தார். அவருக்கு கடுகு சேர்த்த உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை விரும்பாததால், வேறு உணவு தரப்பட்டது.

ராகவேந்திரர் அவரை ஆசிர்வதித்து மஞ்சள் நிற அட்சதை கொடுத்தார். வீட்டில் போய் பிரித்து பார்த்த போது, அது கருப்பாக மாறியிருந்தது. திரும்பவும் ராகவேந்திரரிடமே ஓடி வந்த பண்டிதர் நடந்ததைச் சொன்னார்.

''நீ கடவுளுக்கு படைத்த உணவை அலட்சியப்படுத்தியதன் விளைவு இது'' என்றார் ராகவேந்திரர்.

எவ்வளவு எளிய காணிக்கையையும் இறைவன் ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.






      Dinamalar
      Follow us