sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அட்சய பாத்திரம்!

/

அட்சய பாத்திரம்!

அட்சய பாத்திரம்!

அட்சய பாத்திரம்!


ADDED : ஜன 12, 2018 11:52 AM

Google News

ADDED : ஜன 12, 2018 11:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்கள், திரவுபதியுடன் காட்டிற்கு புறப்பட்டனர்.

அவர்களுடன் அந்தணர் சிலரும், அவரது பத்தினிகளும் உடன் சென்றனர். அன்றுஇரவு கங்கை கரையில் ஆலமரத்தடியில் தங்கினர்.

அப்போது தர்மர் வருத்தமுடன், ''அந்தணர்களே! செல்வம் இழந்த நாங்கள், காட்டில் கிடைக்கும் காய், கனிகளை சாப்பிட்டு வாழப் போகிறோம். ஆனால், விலங்குகளும், அரக்கர்களும் வாழும் வனப்பகுதியில் உங்களால் வாழ முடியாது. தயவு செய்து நாட்டுக்கு செல்லுங்கள்'' என வேண்டிக் கொண்டனர்.

''தர்மரே! எங்களுக்காக வருந்த வேண்டாம். உங்களுக்கு பாரமாக இருக்க மாட்டோம். தங்களின் நன்மைக்காக ஜெபம், தவம் செய்வோம். தேவையான உணவை நாங்களே தேடிக் கொள்வோம். மனதிற்கு இனிமை தரும் நல்ல விஷயங்களையும் கதைகளையும் பேசி, பொழுதை உங்களுடனேயே கழிப்போம்'' என்றனர்.

அவர்களின் அன்பை கண்ட தர்மர் மனம் நெகிழ்ந்தார். அவரின் உயர்ந்த குணத்தைக் கண்ட தவுமியர் என்னும் மகரிஷி, சூரியனுக்கு ஆதித்ய மந்திரத்தை உபதேசம் செய்தார். கழுத்தளவு நீரில் நின்றபடி சூரியனை நோக்கி தர்மர், மந்திரம் ஜெபிக்க சூரியன்நேரில் தோன்றினார். தர்மருக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை வழங்கினார். தர்மர் திரவுபதியிடம் அதைக் கொடுக்க, அனைவருக்கும் உணவு பரிமாறினாள்.






      Dinamalar
      Follow us