தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஊரறியச் சொன்னவர்

ஊரறியச் சொன்னவர்

ஊரறியச் சொன்னவர்


ADDED : செப் 23, 2024 10:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீரங்கத்தில் இருந்து உபதேசம் பெற வந்தார் ராமானுஜர். திருக்கோஷ்டியூர் நம்பியின் வீட்டு வாசலில் காத்திருந்தபோது, 'யார் நீ ?' என நம்பி கேட்டார். 'நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்” என்றார். வீட்டுக்குள் இருந்தபடியே நம்பி, 'நான் செத்தபின் வா' என்றார். அதன் பொருள் புரியாமல் ராமானுஜரும் புறப்பட்டார். இப்படி 17 முறை வந்தும் இதே பதில் கிடைத்தது. கடைசியாக ராமானுஜர், 'நான்' என குறிப்பிடாமல் பணிவுடன், 'அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்றார்.

இப்படி சொன்னதும் சீடனாக ஏற்று 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை உபதேசித்தார். 'யாரிடமும் இதை சொல்லக் கூடாது என்றும், மீறினால் நரகம் கிடைக்கும்' என்றும் எச்சரித்தார். ஆனால் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் விமானத்தில் மீதேறிஊரறிய சத்தமாக மந்திரத்தை சொன்னார்.

கோபம் கொண்ட நம்பியிடம் ராமானுஜர், 'தான் ஒருவன் நரகம் போனாலும், ஊரார் நன்மை பெற்றால் போதும்'' என்றார். ஊருக்கு உபதேசித்த உத்தமர் ராமானுஜரிடம் 'நீயே என்னிலும் பெரியவர்' என பாராட்டினார் நம்பி. திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலின் விமானத்தில் ராமானுஜர் சிலை உள்ளது. எதிரில் நம்பியின் வீடு 'கல் திருமாளிகை' என்னும் பெயரில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us