நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாராஷ்டிராவை சேர்ந்த மோரேஸ்வர் என்னும் பக்தரும், அவரது மனைவியும் ஒருமுறை ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க வந்தனர். சில நாட்கள் தங்கி தரிசித்து விட்டு ஊருக்கு கிளம்பிய நேரத்தில் புயலுடன் மழை வந்தது. ஊருக்கு போக முடியாதோ என கவலை அடைந்தனர்.
இதையறிந்த பாபா, ''என் மீது அன்பு வைத்திருக்கும் குழந்தைகள் வீடு திரும்பும் வரை மழை நிற்கட்டும்'' என்றார். உடனே லேசான துாறலாக மாறியது. மோரேஸ்வர் தம்பதியர் நன்றி தெரிவித்து ஊருக்குப் புறப்பட்டனர். .