தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அஸ்வமேத யாகம்

அஸ்வமேத யாகம்

அஸ்வமேத யாகம்


ADDED : ஆக 02, 2024 01:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 01:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குதிரைப் பந்தயத்தில் பணத்தை இழந்தவர்கள் பலர். புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாட்டம், குதிரைப் பந்தயம் போன்றவைகளில் ஈடுபடக் கூடாது என காஞ்சி மஹாபெரியவர் அறிவுறுத்துவார்.

பாண்டவர்கள், சமையல் கலையில் வல்லவரான நளசக்கரவர்த்தி போன்றோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார்கள் என விளக்கம் அளிப்பார். மகாபாரதம் உணர்த்தும் நீதிகளில் முதலிடம் வகிப்பது சூதாட்டம். குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுபவர்களை 'அஸ்வமேத யாகம் செய்பவர்கள்' எனக் கிண்டலாகச் சொல்வார்கள். 'அஸ்வம்' என்றால் குதிரை.

ஆயுர்வேத வைத்தியர் லட்சுமிகாந்தம் சர்மாவுக்கு மஹாபெரியவர் சொல்வது தான் வேத வாக்கு. ஒருமுறை மடத்திற்கு வந்த போது பக்தர்களின் முன்னிலையில் ''என்ன.. அஸ்வமேத யாகம் தொடர்ந்து நடக்கிறதா?'' எனக் கேட்டார் மஹாபெரியவர்.

பக்தர்களுக்கு துாக்கிவாரிப் போட்டது. சர்மா நல்லவராயிற்றே? சுவாமிகள் இப்படி கேட்கிறார் என்றால் குதிரைப் பந்தயத்திற்குப் போகும் பழக்கம் உள்ளவரா என யோசித்தனர். ''தாங்கள் சொன்னபடி முடிந்தளவுக்கு அஸ்வமேத யாகம் செய்கிறேன்'' என சர்மா சொன்ன பதில் திகைப்பை அதிகப்படுத்தியது.

சிரித்தபடி, ''சர்மா நல்லவர். சமுதாயத்திற்கு நல்லது செய்ய அவர் விரும்பினார். பிரேத சம்ஸ்காரம், ஒரு புண்ணியமான செயல். அனாதை பிரேதங்களை சட்டப்படி வாங்கி, இறுதிச் சடங்கு செய்தால் அவர்களின் ஆன்மா கடைத்தேறும். அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை தரும் எனச் சொன்னேன். அவரும் சிரத்தையுடன் செய்து வருகிறார். அதையே அஸ்வமேத யாகம் நடக்கிறதா எனக் கேட்டேன்'' என்றார் மஹாபெரியவர்.

சுவாமிகளின் விளக்கம் கேட்டு அனைவரும் மெய்சிலிர்த்தனர். சர்மாவைப் போல நாமும் அஸ்வமேத யாகம் செய்யலாமே!.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us