sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வத் திருமணம் - 13

/

தெய்வத் திருமணம் - 13

தெய்வத் திருமணம் - 13

தெய்வத் திருமணம் - 13


ADDED : பிப் 05, 2026 01:31 PM

Google News

ADDED : பிப் 05, 2026 01:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குபேரன் - சித்திரரேகை திருமணம்

பிரம்மா மனதால் நினைத்த போது தோன்றிய பத்துப் புதல்வர்களில் (பிரஜாபதி) ஒருவரான புலஸ்தியர் என்பவரின் மகன் விஸ்ரவன். இவனுக்கு ரிஷி குமாரியான இலவித தேவி, அரக்கர் குலத் தலைவரான சுமாலியின் மகள் கைகேசி என மனைவி இருவர்.

முதல் மனைவிக்கு வைஸ்ரவணன் என்ற மகனும், இரண்டாவது மனைவியான கைகேசிக்கு ராவணன், கும்பகர்ணன், வீபீஷணன் என மூன்று மகன்களும், சூர்ப்பனகை என ஒரு மகளும் பிறந்தனர்.

இலங்கையின் மன்னரான வைஸ்ரவணனுக்கு பெற்றோர் பெண் தேடினர். அவ்வேளையில், கடுமையான தவங்களைச் செய்து அரிய வரங்களைப் பெற்று திரும்பியிருந்தான் ராவணன். அவன் வைஸ்ரவணனை எளிதாகத் தோல்வியடையச் செய்து இலங்கைக்கு மன்னர் ஆனான்.

கவலையடைந்த வைஸ்ரவணன் தானும் கடும் தவம் செய்து, கடவுளிடம் வரம் பெற வேண்டும். அதன் மூலம் இழந்த நாட்டை மீட்க வேண்டும் அல்லது புதிதாக நாட்டை உருவாக்கி மன்னராக வேண்டுமென நினைத்தான். தவம் செய்யும் விருப்பத்தைப் பெற்றோரிடம் தெரிவித்தான். அவனுடைய விருப்பத்தைப் பெற்றோர் ஏற்க மறுத்தனர்.

அவனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், தவம் செய்யும் எண்ணம் மறையும் என அவர்கள் நினைத்தனர். அவனுக்குப் பல இடங்களில் பெண் தேடினர். அவர்கள் தேர்வு செய்த பெண்களை எல்லாம் வைஸ்ரவணன் நிராகரித்தான். அதனால் பெற்றோர் கவலையடைந்தனர்.

வைஸ்ரவணன் தவம் செய்யச் செல்வதாகச் சொன்னால், தன் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், அழகிய, குணவதியான பெண்ணைத் தேடிக் கொண்டு வருவதாகப் பொய் சொல்லி விட்டு புறப்பட்டான்.

வைஸ்ரவணன் செல்லும் வழியிலுள்ள சிவன் கோயில்களில் தவம் செய்யச் சரியான இடத்தைக் காட்டும்படி வேண்டினான். ஒரு நாள் அவன் காசியை அடைந்து விஸ்வநாதரை வணங்கினான். சிவனை நேரில் கண்டது போல மகிழ்ந்தான். அவனுக்குள் விஸ்வநாதரை தினமும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் காசியிலேயே தங்க முடிவு செய்தான். தவம் செய்து வரம் பெற வேண்டுமென்ற அவனது எண்ணம் மறைந்து போனது.

காசியில் தங்கியிருந்த அவன், தினமும் விஸ்வநாதரை தரிசித்து மகிழ்ந்தான். திடீரென ஒருநாள் சிவனை நேரிலேயே கண்டு வழிபட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் எனத் தோன்றியது. உடனே அவன் காசியில் சிவனை நினைத்து தவம் செய்யத் தொடங்கினான். வைஸ்ரவணன் எதற்கு இப்படி தவம் செய்கிறான் எனத் தெரியாமல், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் குழம்பினர். அவனுடைய தவத்திற்கு எந்தவொரு நோக்கமும் இல்லாததால் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என இந்திரன் நிம்மதி கொண்டான்.

அவனுடைய தவம் 800 ஆண்டுக்கும் மேலாக நீடித்தது. அவனுடைய தவத்தால் ஏற்பட்ட வெப்பம் அனைத்து உலகங்களையும் சென்றடைந்தது. அந்த வெப்பத்தால் பூவுலகம், தேவ உலகம் நெருப்பாகக் கொதித்தது. தேவர்கள், முனிவர்கள் சிவனைச் சந்தித்து, அவனுக்கு வேண்டிய வரத்தைத் தந்து, தவத்தை நிறுத்தி தங்களைக் காக்கும்படி வேண்டினர். அவரும் செய்வதாக உறுதியளித்தார்.

வைஸ்ரவணன் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு பார்வதியுடன் சென்ற சிவபெருமான் காட்சியளித்தார்.

“வைஸ்ரவணா... உனக்கு வேண்டியதைக் கேள்” என்றார்.

“எம்பெருமானே தங்களை நேரில் காண்பதே என் விருப்பம். தாங்கள், தாய் பார்வதியுடன் காட்சியளித்து என் விருப்பத்தை நிறைவேற்றி விட்டீர்கள். எனக்கு எந்த வரமும் வேண்டாம்” என்றான்.

அதனைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், “என்னை நினைத்துக் கடும்தவம் செய்த உனக்கு ஏதாவது வரம் தராமல் கைலாயம் செல்ல மாட்டோம். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார்.

அப்போதும் “நான் தங்களை காண விரும்பியே தவமிருந்தேன். எனக்கு எந்த வரமும் வேண்டாம்” என்று மீண்டும் சொன்னான்.

உடனே சிவபெருமான், “எந்த எதிர்பார்ப்புமில்லாத தவத்திற்காக, நான் எதையாவது கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். ராவணனிடம் இலங்கையை இழந்த உனக்கு, அளகாபுரி என்ற அழகிய நகரை உருவாக்கித் தருகிறேன். அத்துடன் செல்வங்களான சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, முகுட நிதி, நந்த நிதி நீல நிதி, கர்வ நிதி, மகாபதும நிதி என்னும் நவநிதிகளையும் தருகிறேன். இனி செல்வத்தின் தெய்வமான திருமகளுக்குத் துணையாக இருப்பதுடன், வடக்குத் திசையின் தலைவராகவும், எட்டுத்திசைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பாய். இனி குபேரன் என்ற பெயருடன் புகழுடன் வாழ்வாய்” என்றார்.

மகிழ்ந்த வைஸ்ரவணன், “நான் எதுவும் வேண்டாத போதும், எனக்கென அளகாபுரியைத் தந்து, செல்வங்கள் அனைத்தையும் தந்து, அதன் காப்பாளராகவும் என்னை நியமித்தீர்கள். தாங்கள் எனக்கு அளித்த இப்பணியைச் சிறப்பாகச் செய்து தங்களின் அன்பை பெறுவேன்” என்றான்.

“இலங்கையை இழந்த உனக்குச் செல்வத்தின் இருப்பிடமான அளகாபுரியைத் தந்து உன்னைப் பெருமைப்படுத்தி இருக்கிறார். உன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றாள் பார்வதி.

உடனே வைஸ்ரவணன், “தாயே... என் பெற்றோர் விருப்பபடி, அவர்கள் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்” என்றான்.

“குபேரனே, உன் பெற்றோர் பார்த்துள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட குபேரனாக உன் பணியை தொடங்கு' எனச் சொல்லி விட்டு சிவன் பார்வதியுடன் அங்கிருந்து மறைந்தார்.

காசியிலிருந்த வைஸ்ரவணன் பெற்றோரைத் தேடி இலங்கைக்குச் சென்றான். நீண்டக் காலமாகக் காணாமல் போன அவனைக் கண்ட பெற்றோர் மகிழ்ந்தனர். தான் செய்த தவத்தைப் பற்றிச் சொல்லி, அதன் பலனாக, கிடைத்த குபேர பதவி பற்றி சொன்னான். அதனைக் கேட்டு பெற்றோர் மகிழ்ந்தனர்.

அதன்பின் நாகர் வகுப்பைச் சேர்ந்த ஓவிய குலத்தவரும், தேவசிற்பியுமான விஸ்வகர்மாவின் வழிவந்த இளவரசியான சித்திர ரேகையை மணமகளாக பேசி முடித்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு நல்ல முகூர்த்த நாளில் குபேரன் - சித்திரரேகை திருமணம் சிறப்பாக நடந்தது.

திருமணம் நடந்த அன்றே குபேரன் மனைவி சித்திரரேகையுடன் அளகாபுரி சென்றான். உலகச் செல்வங்களின் தலைவராகத் தன்னுடைய பணியைத் தொடங்கினார். தன்னலம் கருதாத எந்த வேண்டுதலுக்கும் பெரும் சிறப்பு வந்து சேரும் என்பதற்கு வைஸ்ரவணனின் தவமும், அதற்கு சிவபெருமான் அளித்த குபேரப் பதவியும் உதாரணம்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us