தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/எப்போதும் உணவு கிடைக்க

எப்போதும் உணவு கிடைக்க

எப்போதும் உணவு கிடைக்க


ADDED : அக் 22, 2026 12:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 12:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 25 - ஐப்பசி அன்னாபிஷேகம்

அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்த காஞ்சி மஹாபெரியவர் விரும்பினார். சீடர்கள் ராஜகோபால், தியாகராஜன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த புண்ணியச் செயல் 1985 முதல் இன்று வரை தொடர்கிறது. அன்னாபிஷேகம் பற்றி சுவாமிகள் சொல்வதை கேட்போமா...

எங்கும் நிறைந்திருப்பவர் சிவபெருமான். அவரே உயிர்களின் ஆதாரம். நம் வாழ்க்கைச் சக்கரம் சுற்றுவதற்கு அவரே அச்சாணி. பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் அவருடைய வடிவங்களே. நிலத்தில் நெல் விளைகிறது. அதை அரிசியாக்கி தண்ணீருடன் சேர்த்து வேக வைத்தால் அன்னமாகிறது (சாதம்). ஆகாயத்தில் பரவியுள்ள காற்றின் உதவியால் தானே நெருப்பு எரிகிறது.

எனவே பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த அன்னம். அதனால் தான் அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கம் முழுவதும் சாதத்தை பூசுகின்றனர். அதாவது பஞ்சபூதமும், சிவபெருமானும் ஒன்றே என்பதை நாம் உணர வேண்டும்.

பவுர்ணமி தோறும் அபிஷேகம் செய்வது வழக்கம். ஐப்பசி பவுர்ணமி அன்று அசுவினி நட்சத்திரத்திற்கு உரிய அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். இதனால் எல்லா உயிர்களும் நன்மை பெறும்.

ஐப்பசி பவுர்ணமி அன்று லிங்கத்தின் மீதுள்ள ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கத்திற்கு சமம். அப்போது தரிசித்தால் கோடி முறை சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

பசியால் யாரும் துன்பப்படக் கூடாது. பசித்தவருக்கு உணவு கொடுத்தாலும், அன்னாபிஷேகம் செய்தாலும் உணவு குறைவின்றி கிடைக்கும்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் 70 பொருள்களில் முக்கியமானது அன்னம். அன்னாபிஷேக நாளில் வழிபட்டால் மனத்துாய்மை, தர்ம சிந்தனை, செல்வ வளம், புண்ணியம், மோட்சம் கிடைக்கும்' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

நினைத்தது நடக்க...

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

-நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவனே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us