தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மனசை வெச்சுக்கோ வெள்ளையா...

மனசை வெச்சுக்கோ வெள்ளையா...

மனசை வெச்சுக்கோ வெள்ளையா...


ADDED : ஜூலை 23, 2026 08:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 08:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிராமம் ஒன்றில் முகாமிட்டிருந்த மஹாபெரியவரை தரிசிக்க தொழிலாளர்கள் சிலர் பழம், பூக்களுடன் சென்றனர். அதில் சலவைத் தொழிலாளி ஒருவரும் இருந்தார். மற்றவர்கள் பழம், பூக்களை சுவாமிக்கு கொடுக்கிறார்களே... நாம் எதுவும் கொடுக்கவில்லையே என மனதிற்குள் நினைத்தார்.

மஹாபெரியவரை தரிசிக்க அனைவரும் வரிசையில் நின்றனர். சுவாமிகளை நெருங்கும் போது, 'சாமீ... என்னால உங்களுக்கு காணிக்கை தர முடியலை. உங்க வேட்டியை தாங்க... துவைச்சு தர்றேன்' என சலவைத் தொழிலாளி கூறினார்.

புன்னகைத்த மகான், 'நான் கட்டுறது காஷாய வஸ்திரம். காவி நிறத்தில இருக்கிற இதில அழுக்கு படிஞ்சாலும் தெரியாது. நான் சொல்றதை செய்வியா?' எனக் கேட்டார்.

'சொல்லுங்க சாமீ... அப்படியே செய்றேன்' என்றார்.

'இதோ... மடத்தில வேலை பார்க்கிற சீடர்களோட வேட்டியை துவைச்சுக் குடு' என்றார் சுவாமிகள். அவரும் சம்மதித்தார்.

சீடர்கள் கொடுத்த வேட்டிகளை மூடையாகக் கட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்கு போனார்.

மறுநாளே துவைத்து இஸ்திரி போட்டு பளிச்சென கொண்டு வந்தார்.

நான்கு நாள் கழிந்ததும் மஹாபெரியவர் கிராமத்தை விட்டு புறப்பட தயாரானார். அப்போது கூட்டத்தில் நின்றிருந்த சலவைத் தொழிலாளியை அருகில் அழைத்தார். சீடர்களை சுட்டிக் காட்டி, 'இவாளோட அழுக்கெல்லாம் உன்னால தான் போச்சு. அந்த வேட்டியை போல நம்ம மனசும் வெள்ளையா இருக்கணும். அதற்கு பக்தியும், ஒழுக்கமும் அவசியம்' என சுவாமிகள் உபதேசம் செய்தார்.

அவருக்கு பழங்கள், புது வேட்டியை பிரசாதமாக கொடுத்து ஆசியளித்தார். சலவைத் தொழிலாளியும் ஆனந்த கண்ணீருடன் விடை பெற்றார்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய்.

* கஷ்டம் தீர குலதெய்வத்திற்கு விளக்கேற்று.

* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.

* ஆடி, புரட்டாசி, தை அமாவாசை அன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

-நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us