தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நீயே செய்

நீயே செய்

நீயே செய்


ADDED : ஏப் 15, 2026 08:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமக்காக நம் வேலையை யாராவது செய்தால் சந்தோஷம் அடைகிறோம். உதாரணமாக சோபாவில் இருந்து எழுந்து போய் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கக் கூடச் சோம்பல்படுகிறோம். அந்த வேலையை நாமே செய்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொல்வதைக் கேளுங்கள்.

'அவனவன் வஸ்திரத்தை (துணிகள்) அவனவனே துவைக்க வேண்டும். தேவையான உணவைத் தானே சமைக்க வேண்டும். இதை 'ஸ்வயம் பாகம்' என்பார்கள்.

'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்கிறது பழமொழி. துணியை உடுத்துவது மட்டும் அல்ல; அதைக் கசக்கித் துவைக்க வேண்டியதும் அவனவனுடைய வேலை. தாயார், மனைவி, சகோதரிகளிடம் துவைக்கச் சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது. எனவே உன் உடைகளை நீ துவைப்பது தான் சரி.

வாழ்க்கையிலும் இதை பின்பற்றணும். தினசரி பூஜைக்கு தேவையான பூக்கள், இலைகளை பறித்து தயார் செய்ய அதிகாலையில் எழுந்திரு. இந்த வேலையை பிறரிடம் ஒப்படைக்காதே. ஆனால் அதே நேரத்தில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்கள், பெற்றோருக்கு உதவி செய்வது புண்ணியம் என்பதை மறக்காதே' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

மற்றவரை எந்த சந்தர்ப்பத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது. நமக்குரிய வேலைகளை நாம் செய்தால் பிறரை எதிர்பார்க்கத் தேவையில்லை.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

-நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us