sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 18

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 18

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 18

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 18


ADDED : அக் 17, 2024 11:14 AM

Google News

ADDED : அக் 17, 2024 11:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயலுார் முருகன்

இளையனார் வேலுாரை தரிசித்த பாட்டி, மலேசியாவில் இருக்கும் தன் மகனிடமும் பயண அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

''அது என்னமோ யுகா... அந்த காலத்துல நிறைய கோயிலுக்கு போனவ தான் நான். ஆனாலும் இந்த வயசான காலத்துல எங்காவது கோயிலுக்கு போனா மனசுக்கு ரொம்ப சந்தோஷம் ஏற்படுது''

'ஓம் நமசிவாய' என்றால் இந்த பிறவிக்கு நல்லது. அதே போல 'ஓம் சிவாயநம' என்றால் அடுத்த பிறவிக்கு நல்லது. ஆனால் முருகனின் மந்திரமான 'ஓம் சரவணபவ' என சொன்னால் இந்த பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் நல்லது”

“அவ்வளவு பிடிச்சு போச்சா இளையனார் வேலுார் கோயில்?”

“எனக்கு பிடிச்சது இருக்கட்டும். முருகனுக்கு இரண்டு கோயில்கள் ரொம்ப பிடிக்கும். ஒன்னு திருச்சி வயலுார், மற்றொன்று திருச்செங்கோடு”

“அறுபடை வீடுகள் எல்லாம் இருந்தும் இந்த இரண்டும் முருகனுக்கு ரொம்ப பிடிச்சது எப்படி? அதுக்கு என்ன ஆதாரம்?”

“சொன்னா நம்புவியா! நம்ம அருணகிரிநாதர் வயலுாரில் நீண்ட காலம் தங்கி முருகனை பாடிப் பரவசப்பட்டிருக்காரு. திருச்சியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் இருக்கும் இந்த ஊரெங்கும் வயல்கள் நிறைந்திருக்கும். நெல்லும் வாழையும் தென்னையுமா செழித்து நிற்கும் ஊர் அது”

“முருகனுக்கு மருதநிலமான வயலுாரையும் பிடிச்சிருக்கே”

''குமார வயலுார், உறையூர் கூற்றத்து வயலுார், ராஜ கம்பீர வளநாடு, மேலை வயலுார் என இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு. அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் ஆட்கொண்ட முருகன், 'வயலுாருக்கு வா' என அழைத்தார். இங்குள்ள 'பொய்யா கணபதி' தான் அருணகிரியாருக்கு அருள் புரிந்தவர். இங்குள்ள முருகனே அவரது நாக்கில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருள்செய்தார். இங்கு வழிபட்டால் எழுத்து துறையில் வளர்ச்சி உண்டாகும். அருணகிரிநாதர் 18 பாடல்கள் பாடியுள்ளார். முருகன் கோயிலாக இருந்தாலும் முற்காலத்தில் இது சிவன் கோயிலாக இருந்தது.

வேட்டையாடச் சென்ற சோழமன்னர் ஒருவர் கரும்பு ஒன்றை வாளால் வெட்ட, அதில் ரத்தம் வெளிப்பட்டது. அந்த இடத்தை தோண்டிய போது சிவலிங்கம் கிடைத்தது. அதன்பின் கோயில் எழுப்பி சுவாமிக்கு 'ஆதிநாதர்' எனப் பெயரிட்டு வழிபட்டார். 9 ம் நுாற்றாண்டில் ராஜகேசரி வர்மன், குலோத்துங்க சோழன், ராஜேந்திர சோழன் திருப்பணிகள் செய்துள்ளனர்”

“ஓ... பாட்டி இங்குள்ள முருகன் பிரசித்தி பெற்றவர் தானே... சிவலிங்கம் இருந்ததாகச் சொல்றியே?”

''இங்கு சிவபெருமானை வழிபட்டார் முருகன். அதுவும் எப்படி? வேலினால் குளம் உண்டாக்கி பெற்றோரை வழிபட்டார். பெற்றோரை தான் முதலில் வணங்க வேண்டும் என நமக்கு சொல்கிறார் முருகன். அது மட்டுமல்ல நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை போல வயலுார் முருகனை நினைத்தாலும் தரிசித்தாலும் முக்தி கிடைக்கும். திருமணத் தடை உள்ளவர்கள், முதல்நாள் இரவில் இங்கு தங்கி மறுநாள் காலையில் சக்தி தீர்த்தத்தில் நீராடி வழிபடுகின்றனர். முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், காது குத்துதல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்க பிரதட்சணம் செய்தல், பெண்கள் அடி பிரதட்சணம் செய்தல் என நேர்த்திக்கடன்களைச் செய்கின்றனர். நாகதோஷம், குழந்தை வரம் இல்லாதவர்கள் சக்தி தீர்த்தத்தில் நீராட தோஷம் நீங்கும்”

“ஓ இவ்வளவு பெருமை வாய்ந்த தலமா வயலுார்?”

'ஏழ்தலம் புகழ் காவேரியால் விலை

சோழமண்டல மீதே மநோகர

ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலுாரா'

என வயலுார் முருகனை பழநி திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார் அருணகிரிநாதர். அடியவரான ஞான வரோதையருக்கு அருள் புரிந்ததும் இங்கு தான். பழநி, திருச்செந்துார் கோயில்களுக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். ஆனால் வயலுாருக்கு வைத்த நேர்த்திக்கடனை வேறெங்கும் செலுத்த முடியாது”

“அட வேடிக்கையா இருக்கே”

“அதுமட்டுமில்லை, தத்து திருப்புதல் என்னும் நேர்த்திக்கடனை இங்கு செய்வது விசஷேம். கிரக தோஷம் உள்ள குழந்தைகளை முருகனுக்கு தத்து கொடுப்பார்கள். தோஷ காலம் முடிந்ததும் தத்து திருப்புதல் என்பதையும் செய்வது அவசியம். கிருபானந்த வாரியார் வயலுார் முருகனுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். தன்னை நாடி வருவோரிடம் 'வயலுார் முருகனை பார்த்திருக்கிறீர்களா' எனக் கேட்பது வழக்கம். சரி யுகா... உன்கிட்ட ஒரு கேள்வி... பதில் சொல்லு பார்ப்போம். நீ ஆண்பிள்ளையா பெண்பிள்ளையா?”

“என்ன பாட்டி அதில் என்ன சந்தேகம். நான் ஆண்பிள்ளை தான்”

“அது தான் இல்ல. நீ பெண்பிள்ளை. சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் வரலாறு குறித்துச் சொல்வார். தாய்மார்கள் குழந்தைகளை பெறுவார்கள். அதன் பிறகு அந்த குழந்தைக்கு அப்பா பெயர் வைப்பார். ஆனால் முருகனின் வரலாற்றில் அப்பா சிவன் பெற்றுக் கொடுக்க அம்மா பார்வதி பெயர் வைக்கிறாள். இது பெரும் புதுமை. அதனால் முருகன் ஒருவர் மட்டுமே ஆணிடமிருந்து தோன்றியதால் ஆண்பிள்ளை. மற்ற அனைவரும் பெண்ணிடம் இருந்து பிறந்ததால் பெண்பிள்ளைகள். ஆக நீயும் ஒரு பெண்பிள்ளை. சரியா?” என சிரித்தார் பாட்டி.

“சமயம் பார்த்து இப்படி தாக்குறியே பாட்டி. பஷே்'' என்றான் யுகன்.

வாரியார் சொற்பொழிவு செய்வதோடு எழுதுவதிலும் வல்லவர். அவர் நடத்திய இதழில் திருப்புகழ் பாடலுக்கு விளக்கம், கந்தர் அலங்கார உரை, கற்பு நெறிக் கதைகள், ஆன்மிக கட்டுரைகளை எழுதினார்.

இந்த இதழ் பலரது வாழ்வை திருத்த உதவியதாக வாரியார் குறிப்பிட்டுள்ளார். பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் 500க்கும் அதிகமான ஆன்மிக கட்டுரைகளை எழுதியதும் சாதனை தானே”

“அடுத்த வாரம் முருகனுக்கு பிடிச்ச இரண்டாவது ஊரைப் பத்தி சொல்லப்போறியா பாட்டி?”

“சரியா சொன்னப்பா... திருச்செங்கோடு தான் யுகா.”



-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us