sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

நாராயணா என்னும் நாமம்

/

நாராயணா என்னும் நாமம்

நாராயணா என்னும் நாமம்

நாராயணா என்னும் நாமம்


ADDED : டிச 13, 2024 08:47 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழநாட்டில் திருக்குறையலுாரில் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று பிறந்தவர் திருமங்கையாழ்வார். போர் செய்வதில் வல்லவரான இவர் ஆழ்வாராக மாறிய விதம் நம்மை சிலிர்க்க வைக்கும்.

சோழநாட்டின் படைத்தளபதி பெரிய நீலன். இவரது மகன் நீலன் மாபெரும் வீரன். தமிழில் புலமை பெற்றிருந்தான். இவனது வீரத்திற்காக 'பரகாலன்' (எதிரிகளுக்கு எமன்) என பெயர் சூட்டி, திருவாலி என்னும் குறுநிலத்துக்கு மன்னராக அவனை நியமித்தார் சோழமன்னர். அன்று முதல் சோழ மன்னருக்கு கப்பம் கட்டினான் நிலன்.

ஒருநாள் பெருமாளின் பக்தையான குமுதவல்லியை பார்த்தான். பிறப்பிலேயே கொந்தளிக்கும் உணர்வு கொண்டவனுக்கு, அவளை பார்த்ததும் மனம் அடங்கியது. அவளை திருமணம் புரிய வேண்டும் என துடித்தான். இதற்காக அவளின் வீட்டுக்கு துாது அனுப்பினான். ஆனால் குமுதவல்லியோ, 'என் விருப்பம் பெருமாளுக்கு தொண்டு செய்வது. வைணவரை திருமணம் செய்தால்தான் இது சாத்தியம். மன்னரோ வீரத்தில் தேர்ந்தவர். அவரிடம் பக்திக்கு இடமில்லை. எனக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது' என மறுப்பு தெரிவித்தாள்.

நேராக அவளின் வீட்டுக்கு சென்றான். அவனை பார்த்ததும் குமுதவல்லியின் தந்தை பதறினார். ஆனால் நடந்ததோ வேறு.

உள்ளே சென்றவனுக்கு கோயிலுக்குள் சென்ற அனுபவம் ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் பெருமாளின் சிற்பங்கள். திருமண் காப்பு. இதமான குங்கிலயப்புகை. பெருமாளின் நாமத்தை உச்சரித்தப்படி இருந்த குமுதவல்லி அவனை அன்பாக வரவேற்றாள்.

அவளிடம், 'ஏன் இந்த தவக்கோலம். இந்த வயதில் ஏன் யோக வாழ்க்கை வாழ்கிறாய்' எனக் கேட்டான் நீலன்.

'நாம் பிறப்பு எடுத்ததே பிறவா நிலையை அடையத்தான். பெருமாளுக்கு தொண்டு செய்தால் இது சாத்தியம். இந்த எண்ணம் யாருக்கு உள்ளதோ அவரையே திருமணம் செய்வேன்' என்றாள் குமுதவல்லி.

'சரி. நான் அதற்கு என்ன செய்ய வேண்டும்' என ஆர்வமாக கேட்டான் நீலன்.

'வாள், வேல், சூலம், கட்டாரி என ஆயுதங்களோடு வாழ்வு நடத்தும் தாங்கள் மாற வேண்டும். நெற்றியில் திருநாமம், அடியவர்களுக்கு அன்னம் வழங்குவது என தொண்டு வாழ்க்கைக்குள் நுழைய வேண்டும்' என்றாள்.

சம்மதம் தெரிவித்து ஒப்பிலியப்ப பெருமாள் கோயிலுக்குள் நுழைந்தான். இதற்கு முன் பலமுறை கோயிலுக்கு வந்தாலும் அவனது மனம் முதல் முறையாக திகட்டாத ஆனந்தத்தை அனுபவித்தது. பெருமாளை கண்கள் குளிர கண்டான். பச்சைக் கற்பூர வாசம், துளசியின் மணம், பெருமாளின் தரிசனம் என பக்தியில் கரைந்தான். குமுதவல்லியின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டான். பெருமாள் மீது பாசுரங்களை பாடி ஆழ்வாராக மாறினான். அவர் தான் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார். அவர் பாடிய பாசுரம் ஒன்றை பாடி பெருமாளை சேவிப்போம்.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்

உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.






      Dinamalar
      Follow us