நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு ஊழியர் சுவாமிநாதன். தன் வீட்டில் இரவு நேரத்தில் வரவு, செலவு கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அவரைத் தேடி வந்தவரிடம், 'என்ன விஷயமாக வந்தீர்கள்' எனக் கேட்க அதற்கு அவர், 'சொந்த விஷயமாக' என்றார். எரிந்த விளக்கை அணைத்து விட்டு, மற்றொரு விளக்கை ஏற்றினார். பேசி விட்டு வந்தவர் கிளம்பும் போது பழைய விளக்கை மீண்டும் ஏற்றினார்.
''ஏன் மாற்றி மாற்றி ஏற்றுகிறீர்?'' எனக் கேட்டார் வந்தவர். ''நீங்கள் வரும் போது அரசுப்பணியைச் செய்து கொண்டிருந்தேன். அது உங்களின் வரிப்பணம். அதனால் அந்த விளக்கை பயன்படுத்தினேன். ஆனால் சொந்த விஷயம் பேசும் போது என் வீட்டு விளக்கை ஏற்றினேன்'' என்றார். இதுதான் அரசு ஊழியரின் நேர்மை.