தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கோபத்தை குடித்தவர்

கோபத்தை குடித்தவர்

கோபத்தை குடித்தவர்


ADDED : ஜன 23, 2025 11:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை காளியிடம் ஒப்படைத்தார் சிவன்.

கோர வடிவெடுத்த காளி, அசுரனைக் கொன்றாள். ஆனாலும் அவளின் ஆவேசம் அடங்கவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியைக் கண்டு அஞ்சின. அப்போது சிவன் கட்டளைப்படி, மாய பாலகன் ஒருவன் காளியின் முன் தோன்றி பசியால் அழுதான். அதைக் கேட்ட காளிக்கு தாய்மை குணம் மலர்ந்தது. மார்போடு அணைத்துப் பாலுாட்டினாள்.

தாய்ப்பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்துக் குடித்தது அக்குழந்தை. சாந்தம் அடைந்தாள் காளி. அக்குழந்தையே வளர்ந்து 'க்ஷேத்திர பாலகர்' எனப் பெயர் பெற்று காவல் தெய்வமாக திகழ்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us