தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/படியளந்த பரந்தாமன்

படியளந்த பரந்தாமன்

படியளந்த பரந்தாமன்


ADDED : மே 22, 2025 02:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 02:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் அருகிலுள்ள கூரம் என்னும் ஊரில் ஸ்ரீவத்சாங்கர் என்னும் பக்தர் இருந்தார். ராமானுஜரை குருவாக ஏற்றுக் கொண்டார். செல்வ வளம் மிக்க இவர் பெருமாள் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் செய்து வந்ததால் 'கூரேசர்' எனப் பெயர் பெற்றார்.

பிற்காலத்தில் குருவான ராமானுஜருடன் சேர்ந்து ரங்கநாதருக்கு சேவை செய்ய திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தங்கினார். செல்வ வாழ்வைத் துறந்து எளியவராக வீடுகளில் உஞ்சவிருத்தி பெற்று (பிச்சை எடுத்து) சாப்பிட்டார். ஒருநாள் வெளியில் செல்லாமல் பட்டினி கிடந்தார்.

அப்போது ரங்கநாதருக்கு பிரசாதம் படைக்கும் நேரம் என்பதால் கோயில் மணி ஒலித்தது. அதைக் கேட்ட கூரேசரின் மனைவி, “ஆழ்வார் பட்டினி கிடக்க, அரங்கன் மட்டும் அமுது செய்வது நியாயமா?” என வருந்தினாள்.

பக்தரின் பசியைக் காண சகிக்காத ரங்கநாதர் ஒரு வைணவ அடியவர் போல வீட்டுக்கு வந்தார். “என் பெயர் அழகிய மணவாளதாசன்” என்று சொல்லி தன்னிடமிருந்த பிரசாதத்தை கூரேசரிடம் கொடுத்து மறைந்தார். அதன் பின்னரே அடியவர் வேடத்தில் படியளக்க வந்தவர் ரங்கநாதர் என்பது தெரிந்தது. பிரசாதத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை சாப்பிட்ட கூரேசர், இரண்டு பங்கை மனைவியிடம் கொடுத்தார்.

அதனைச் சாப்பிட்ட விசேஷத்தால் கூரேசருக்கு பட்டர், ராமப்பிள்ளை என்னும் ஆண் குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் 'பெருமாளின் குமாரர்கள்' என போற்றப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us