sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 13

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 13

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 13

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 13


ADDED : மே 22, 2025 02:55 PM

Google News

ADDED : மே 22, 2025 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகா கணபதி

மகா என்றால் பெரிய என்று பொருள். எல்லா தெய்வங்களையும் விட உயர்ந்தவராகவும் உருவத்தில் பெரியவராகவும் விளங்குவதால் இப்பெயர் பெற்றார். பத்து திருக்கரங்களுடன் தேவியோடு திகழ்பவர் இவர்.

தியான சுலோகம்

ஹஸ்தீந்த்ராநநம் இந்து சூடம் அருணஸ்சாயம் த்ரிநேத்ரம் ரஸாத்

ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸபத்ம கரயா ஸ்வாங்கஸ்தயா ஸந்ததம் |

பீஜாபூர கதேக்ஷு கார்முக லஸச் சக்ராப்ஜ பாசோத்பல -

வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலசான் ஹஸ்தைர் வஹந்தம் பஜே ||

ஹஸ்தி இந்த்ராநநம் - சிறந்த யானையின் முகம் உடையவரும்

இந்து' சூடம் - பாதிமதி சூடிய பெருமானும்

அருணஸ்சாயம் - செம்மேனியரும்

த்ரிநேத்ரம் - முக்கண்ணரும்

ஸ்வாங்கஸ்தயா - தன் மடி மீது அமர்ந்திருக்கும் தேவியும்

ஸபத்ம கரயா - கையில் தாமரை ஏந்தியிருப்பவளும் ஆன

ப்ரியயா - வல்லபை (மனைவி) என்னும் பிரியமானவளால்

ஸந்ததம் - எப்போதும்

ரஸாத் - விருப்பத்துடன்

ஆச்லிஷ்டம் - தழுவப் பட்டிருப்பவரும்

பீஜாபூர - மாதுளம் பழம்

கதா - கதை எனும் ஆயுதம்

இக்ஷு கார்முக - கரும்பு வில்

லஸச்சக்ர - ஒளிவீசும் சக்கர ஆயுதம்

அப்ஜ - செந்தாமரை

பாச - பாசம் எனும் ஆயுதம்

உத்பல - நீலோத்பல மலர்

வ்ரீஹ்யக்ர - நெற்கதிர்

ஸ்வவிஷாண - தனது ஒடித்த தந்தம்

ரத்னகலசான் - ரத்ன கும்பம் ஆகிய இவற்றை

ஹஸ்தை: - (தம் பத்து) கைளால்

வஹந்தம் - தாங்கியிருப்பவருமான மகா கணபதியை

பஜே - வணங்குகிறேன்

வல்லபை: கணபதியின் திருவருள்தான் சக்தி. இருவரும் பிரிக்க முடியாதவர்கள்.

மாதுளம் பழம்: பிறவிப்பிணி நீக்கத்தை இக்கனி உணர்த்துகிறது.

சக்கரம்: விஷ்ணுவின் ஆயுதம். கூர்மை. காலம், செயல்நேர்த்தி இவற்றின் அடையாளம்.

கதை: இது பிடிக்கும் தண்டமும் உருண்டையான முனைத்தலைப் பகுதியும் சேர்ந்த ஆயுதம்.

நீலோத்பலம்: குவளை. அம்பிகை ஏந்தியுள்ள மலர். இறைவனின் ஐந்தொழில்களில் இது படைத்தலைக் குறிப்பது.

ரத்ன கும்பம்: அனைத்து செல்வங்களையும் தருபவர் என்பதை உணர்த்துகிறது.

கரும்பு வில்: மன்மதனின் ஆயுதம். உயிர்கள் வேண்டுபவற்றை அருள்பவர் கணபதி என்பதைக் காட்டுவது.

செந்தாமரை: ஞானம், ஆரோக்கியத்தை குறிப்பது.

பாசம்: உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது.

நெற்கதிர்: பயிர் வளம், அடியார்களின் ஆரோக்கியத்தைக் குறிப்பது.

ஒடித்த தந்தம்: துாய்மை, மனஉறுதியால் செயல் நிறைவேற்றுவதைக் காட்டுவது.

பலன்: எச்செயலிலும் வெற்றி, தடைநீக்கம், திருமணம் நிறைவேற்றம், வீடுபேறு.



அருள் தொடரும்...

வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்






      Dinamalar
      Follow us