தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாலா... தண்ணீரா...

பாலா... தண்ணீரா...

பாலா... தண்ணீரா...


ADDED : ஜூன் 26, 2025 02:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 02:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நட்பின் இலக்கணம் குறித்து விளக்க ஆரம்பித்தார் குரு,

''சீடர்களே... உங்கள் இளமைக்கால நட்பு முக்கியமானது. ஏனென்றால், அப்போது உங்களுக்கு கிடைக்கும் நண்பர்களை பொறுத்தே எதிர்கால வாழ்வு அமையும்.” என்றார்.

இதை கேட்டதும் ஒரு சீடனுக்கு சந்தேகம் எழுந்தது, “குருவே, நல்லவர்களுடன் சேரும் போது தீயவனும் நல்லவனாகிறான். ஆனால், தீயவர்களுடன் சேரும் போது மட்டும், நல்லவனும் கெடுகிறானே... ஏன்?'' என்றான்.

குரு சிரித்தபடியே, “ஒரு அண்டா நிறைய தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள். அதில் ஒரு குவளை பால் ஊற்றினால் என்னாகும்?'' சீடன் யோசித்தபடி,''தண்ணீரோடு பால் கலந்து தன் நிலையை இழந்து விடும்''

''சரி... அதேசமயத்தில் ஒரு அண்டா பாலில் ஒரு குவளை தண்ணீரை சேர்த்தால்...?''

''அது பாலின் தன்மையை பெற்று விடும்''

''மிகச்சரி. அதுபோலவே நட்பும். தீயவர்களிடம் பழகும் நல்லவன் கெட்டுப் போவான். ஆனால், நல்லவர்களிடம் பழகும் தீயவன் நல்லவன் ஆவான். எனவே, நட்பு கொள்ளும் முன், அவர்களின் குணம் பற்றி தெரிந்து பழக வேண்டும்” என்றார் குருநாதர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us