ADDED : ஜூலை 11, 2025 08:52 AM

மன்னருக்கு ஒரு சந்தேகம் வர மந்திரியை வரவழைத்தார்.
'' கடவுளை நேரில் நான் பார்க்க வேண்டும். ஏற்பாடு செய்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு'' என உத்தரவிட்டார் மன்னர். புரியாமல் விழித்தார் மந்திரி.
''ஒரு மாதம் அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் ஏற்பாடு செய்யாவிட்டால் உமக்கு தண்டனை அளிப்பேன்'' என எச்சரித்தார். நாடெங்கும் செய்தி பரவியது.
''கடவுள் வைகுண்டத்தில் இருக்கிறார், கயிலாயத்தில் இருக்கிறார், சூரிய மண்டலத்தில் இருக்கிறார், வேதங்களில் மறைந்திருக்கிறார்'' என பண்டிதர்கள் ஆளுக்கொரு விளக்கம் அளித்தனர். ஆனால் யாரும் கடவுளைக் காட்ட முன்வரவில்லை.
கெடு முடிய இருந்ததால் மந்திரி குழப்பத்தில் தவித்தார். மந்திரியை விடுவிக்க எண்ணிய அவரது மகள்(சிறுமி) அரண்மனைக்கு புறப்பட்டாள்.
'' மன்னா! கடவுளின் இருப்பிடத்தை காட்டினால் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிப்பதாக கேள்விப்பட்டேன்! அதற்கு முன்னதாக கடவுள் இல்லாத இடத்தை நீங்கள் காட்டுங்கள்'' என்றாள்.
மவுனமாக இருந்தார் மன்னர்.
'' மன்னா! எங்கும் நிறைந்தவர் கடவுள் என்றாலும் தவத்தில் சிறந்த ஞானிகளால் மட்டுமே அவரைக் காண முடியும்.
புலன்களை அடக்கிய அவர்களின்மனமே கடவுள் குடியிருக்கும்கோயில்'' என்றாள். தவத்தின்
மேன்மை அறிந்த மன்னர் தானும் தவத்தில் ஈடுபட முடிவு செய்தார்.