தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பல்லாண்டு வாழ்க

பல்லாண்டு வாழ்க

பல்லாண்டு வாழ்க


ADDED : அக் 16, 2025 02:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 02:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாண்டிய மன்னர் வல்லபதேவன் ஒருநாள் இரவு நகர சோதனைக்காக புறப்பட்டார். ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவரிடம், 'நீர் யார்?' எனக் கேட்டார் மன்னர்.

''மன்னா! நான் ஒரு வழிப்போக்கன். கங்கையில் நீராடி தீபாவளியன்று காசி விஸ்வநாதரை தரிசித்தேன். இப்போது தனுஷ்கோடிக்கு போகும் வழியில் இங்கு தங்கியிருக்கிறேன்'' என்றார்.

'' ஏதாவது ஸ்லோகம் ஒன்றை சொல்லுங்கள்'' எனக் கேட்டார் மன்னர். ஸ்லோகம் ஒன்றை சொல்லி அதற்கான பொருளையும் கூறினார் முதியவர்.

“இரவுக்கு தேவையானதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் தேட வேண்டும். அதைப் போல மறுமைக்கு (அடுத்த பிறவி) வேண்டியதை இம்மையில் (இப்பிறவி) தேட வேண்டும்'' என்றார்.

முதியவரை வணங்கி விட்டு புறப்பட்ட மன்னர், “முதியவர் கூறியபடி மறுமைக்கு வேண்டியதை தேடாமல் வாழ்நாளை வீணாக்கி விட்டேனோ'' என வருந்தினார்.

மறுநாள் காலையில் குலகுருவான செல்வ நம்பியை அழைத்தார். “மறுமையில் இன்பம் அடைய என்ன வழி?” எனக் கேட்டார்.

“மன்னா! கல்வியில் சிறந்த பண்டிதர்களை விடை கேட்கலாமே'' என்றார் செல்வநம்பி.

அதன்படி பண்டிதர்களுக்கு போட்டியும், பரிசும் அறிவிக்கப்பட்டது. சரியான விடை அளிப்போருக்கு சன்மானமாக அரண்மனை வாசலில் மூங்கில் குச்சி நாட்டப்பட்டு, அதன் உச்சியில் பொற்கிழி கட்டவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி பாண்டிய மன்னரின் சந்தேகத்தைப் போக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். 'யாமே பரம்பொருள்! எம்மை வழிபட்டால் மறுமை இன்பம் கிடைக்கும்' என்ற உண்மையை நிலைநாட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆழ்வாரும் 'நாராயணனே பரம்பொருள்' என்பதை வேதத்தின் அடிப்படையில் மன்னரிடம் நிரூபித்தார். அப்போது மூங்கில் குச்சி தானாக வளைந்து நிற்க, பொற்கிழியைப் பெற்று மகிழ்ந்தார் பெரியாழ்வார்.

அப்போது கருடவாகனத்தில் பெருமாள் காட்சியளிக்க 'பல்லாண்டு பல்லாண்டு' எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us