தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/இவரல்லவா நல்லாசிரியர்

இவரல்லவா நல்லாசிரியர்

இவரல்லவா நல்லாசிரியர்


ADDED : அக் 30, 2025 11:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 11:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளைஞர் ஒருவர் தன் பள்ளிக்கூட தமிழாசிரியரை ஒருநாள் சந்தித்தார். அப்போது அவர், ' என்னைத் தெரிகிறதா?'' எனக் கேட்டார். 'எனக்கு நினைவு இல்லை நீங்களே... யார் எனச் சொல்லுங்கள்'' என்றார்.

''ஐயா! நான் உங்களின் முன்னாள் மாணவன்'' என்றார். அதற்கு ஆசிரியர் '' மகிழ்ச்சி! என்ன செய்கிறீர்கள்?'' எனக் கேட்டார். 'நான் ஆசிரியராக இருக்கிறேன்'' என்றார் இளைஞர்.

''உங்களைத் துாண்டியது யார்?''

''உங்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தொழிலில் உள்ளேன்''

''எப்படி தாக்கம் ஏற்பட்டது?''

அதற்கு, ''நான் ஒரு கதை சொல்லட்டுமா?'' என ஆரம்பித்தார் இளைஞர்.

''ஒருநாள் சகமாணவர் ஒருவர் விலையுயர்ந்த கடிகாரம் அணிந்து பள்ளிக்கு வந்தார். நான் அதை திருடினேன். கடிகாரம் காணாததால் அந்த மாணவர் புகார் செய்தார். ''கடிகாரத்தை யார் எடுத்து இருந்தாலும் திரும்பக் கொடுங்கள்'' என அறிவித்தார். நான் எப்படி திருப்பித் தருவது என மலைத்தேன்.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிக அவமானமாக இருந்தது. அப்போது, ''மாணவர்களே கண்ணை மூடிய படி வரிசையாக நில்லுங்கள்'' என கட்டளையிட்டார். ஒவ்வொருவராக சட்டை பாக்கெட்டில் கையை விட்டு பார்த்தபடி நகர்ந்தார். என் பாக்கெட்டில் இருந்து கடிகாரத்தை எடுத்துக் கொண்டார். கண்கள் மூடி இருந்ததால் யாருக்கும் தெரியாது.

பின் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்தார். இது பற்றி ஒரு வார்த்தை கூட யாரிடமும் கேட்கவில்லை.

அந்த ஆசிரியர் நீங்கள் தான்.அன்று நீங்கள் தான் என் மானத்தை காப்பாற்றினீர்கள். திருடன், மோசடிக்காரன் என திட்டாமல் இருந்தீர்கள் அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு அரிய செய்தியை கற்றுத் தந்தது. ஆசிரியர் என்பவர் இப்படி தான் இருக்க வேண்டும் கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதை என் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என விரும்பினேன்'' இதனைக் கேட்ட ஆசிரியர் 'அற்புதம்' என்றார்.

மீண்டும் இளைஞர் கேட்டார். ''இப்போதாவது என்னை தெரிகிறதா'' எனக் கேட்டார்.

''யார் என தெரியவில்லையே?'' என்றார்.

இன்னுமா தெரியவில்லை என கேட்டார் இளைஞர்.

''நானும் அப்போது கண்ணை மூடியிருந்தேன்'' என்றார் ஆசிரியர். நல்ல சமுதாயத்தை உருவாக்கும் நல்லாசிரியரை போற்றுவோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us