sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பாத்துட்டேன் பாத்துட்டேன்

/

பாத்துட்டேன் பாத்துட்டேன்

பாத்துட்டேன் பாத்துட்டேன்

பாத்துட்டேன் பாத்துட்டேன்


ADDED : நவ 27, 2025 11:21 AM

Google News

ADDED : நவ 27, 2025 11:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாலட்சுமியும், அவளின் சகோதரி ஜேஷ்டாதேவியும் (மூதேவி) பூலோகத்தில் உலா வந்தனர். அப்போது ஒருவனை அவனது எஜமானன், '' மூதேவி! அசமந்தம் மாதிரி என்னடா பண்ணிட்டிருக்கே!'' எனத் திட்டினார். இதைக் கேட்ட ஜேஷ்டா வருத்தமுடன், '' பார்த்தாயா லட்சுமி! திட்டுபவன் கூட என் பெயரைத் தான் சொல்கிறான். இந்த வேலைக்காரனை இப்போதே பணக்காரனாக ஆக்குகிறேன் பார்'' என ஆவேசப்பட்டாள். அவன் செல்லும் வழியில் பொற்காசு மூடை ஒன்றைக் கிடக்கச் செய்தாள். அவனும் எடுத்து செல்ல மனைவி சந்தோஷத்தில் குதித்தாள். அண்டை வீட்டுப் பெண்ணிடம் உழக்கு வாங்கி வந்து காசை அளக்க ஆரம்பித்தாள்.

உழக்கு கொடுத்தவளோ சதிகாரி. எதற்கு உழக்கு என அறிய அதனடியில் புளியை ஒட்டிக் கொடுத்தாள். அவளது எண்ணம் போலவே, உழக்கை திரும்பி கொடுக்கும் போது, புளியில் பொற்காசு ஒட்டியிருந்தது. பேராசை கொண்ட அண்டை வீட்டுக்காரி இரவோடு இரவாக பொற்காசுகளை திருடினாள். பணத்தை இழந்த வேலைக்காரன் மீண்டும் வேலைக்குச் சென்றான். ஒரு வைர மோதிரம் கிடைக்கச் செய்தாள் ஜேஷ்டா. அதை அணிந்த அவன் குளத்தில் குளிக்கச் சென்ற இடத்தில் கையை உதறவே தண்ணீருக்குள் மோதிரம் விழுந்தது. எவ்வளவு தேடியும் பயனில்லை.

சளைக்காத ஜேஷ்டா முத்து மாலை ஒன்றை கிடைக்கச் செய்தாள். மோதிரம் போல இதுவும் போய் விடுமோ என்ற பயத்தில் குளக்கரையில் கழற்றி வைத்து விட்டு குளித்தான். ஆனால் அவன் திரும்பி வந்த போது மாலையைக் காணவில்லை. தன் கெட்ட நேரத்தை எண்ணி அவன் வருந்தினான். ஜேஷ்டாவும் தங்கை மகாலட்சுமியிடம் நடந்ததை விவரித்தாள்.

இரக்கப்பட்ட மகாலட்சுமி அவனுக்கு அருள்புரிய முடிவு செய்தாள். மறுநாள் காலை, குளத்தில் மீன்கள் பிடித்து மனைவியிடம் சமைக்கச் சொல்லிக் கொடுத்தான். விறகு இல்லாததால் பனை ஓலைகளை வெட்டி வரச் சொன்னாள் மனைவி. மரமேறிய போது அதில் பறவையின் கூடு ஒன்றில் மாலை தொங்குவதைக் கண்டான் அவன். குறிப்பிட்ட பறவையே மாலையை எடுத்திருப்பதை புரிந்து கொண்டான். இதற்கிடையில் வீட்டில் மீனை அறுத்த போது வயிற்றில் மோதிரம் இருக்கக் கண்டாள்.

வேலைக்காரனும், அவனது மனைவியும் ஒரே சமயத்தில் 'பாத்துட்டேன்; பாத்துட்டேன் ' என ஒருவருக்கொருவர் தாங்கள் பார்த்ததை தெரிவித்த போது பொற்காசுகளை திருடிய அண்டை வீட்டுப் பெண்ணின் காதில் விழுந்தது.

'பொற்காசுகளை திருடிய விஷயம் தெரிந்து விட்டது போல...' என அவள் எண்ணிக் கொண்டாள். மன்னரிடம் புகார் செய்தால் அவமானப்பட நேருமே என பயந்தாள். அன்றிரவில் வேலைக்காரன் வீட்டு வாசலின் முன்பு பொற்காசுகளை வைத்து விட்டுச் சென்றாள். மகாலட்சுமியின் அருள் இருந்தால் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை விவரிக்க முடியாது.






      Dinamalar
      Follow us