தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தாயாக வந்தவர்

தாயாக வந்தவர்

தாயாக வந்தவர்


ADDED : பிப் 12, 2026 11:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 11:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக தாயின் வீட்டை நோக்கி புறப்பட்டாள். வலி ஏற்படவே சிவபெருமானை வேண்டினாள். சிவனும் அவளின் தாய் வடிவில் தோன்றி உதவி செய்தார். குழந்தை பிறந்ததும் அவளின் தாகத்தை தீர்க்க, கால் விரலால் பூமியைக் கீறி தண்ணீரை வரவழைத்தார். அதைக்குடித்த அவள் நிமிர்ந்து பார்த்த போது தாயாக வந்தவர் அங்கில்லை.

அவளுடைய உண்மையான தாய் எதிரில் நின்றிருந்தாள். தாய், மகளுக்கு வானில் அம்மையப்பராக காட்சியளித்தனர். அவர்களே வைத்தியநாதர், சிவகாமியம்மனாக ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகத்தில் கோயில் கொண்டனர். அடியார்களுக்காக 24 திருவிளையாடல்களை நிகழ்த்திய தலம் இது. மன்னர் திருமலைநாயக்கரின் வயிற்றுவலி இத்தல சிவனருளால் மறைந்தது. சிவபக்தையான இரண்டு பெண்கள் (மடவார்) தங்கியதால் இத்தலத்திற்கு 'மடவார் வளாகம்' எனப் பெயர் வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us