தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/எப்படி துாங்குவார்

எப்படி துாங்குவார்

எப்படி துாங்குவார்


ADDED : ஏப் 23, 2026 12:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 12:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு திருமண விழாவிற்கு முருகபக்தரான வாரியாரும், நடிகர் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தனர்.

இருவரும் பேசிய போது வாரியாரைக் கிண்டல் செய்யும் விதமாக, “முருகனுக்கு ஆறு தலைன்னு சொல்றீங்க, இரவில் துாங்கும் போது எப்படி ஒரு பக்கமா துாங்கமுடியும்?” எனக் கேட்டார்

எம்.ஆர்.ராதா. அங்கு இருந்தவர் அனைவரும் பலமாக சிரிக்க, வாரியாருக்கோ தர்ம சங்கடமாகி விட்டது. மணமகளின் தந்தையை அழைத்த வாரியார், “நேத்து இரவு துாங்கினீங்களா?” எனக் கேட்டார். அவரோ

''விடிஞ்சா கல்யாணத்தை வச்சிட்டு எப்படி சுவாமி பெண்ணைப் பெத்த நான் துாங்க முடியும்” என்றார்.

“மகளின் திருமணத்தை நல்லபடியா நடத்த நினைக்கும் இவருக்கே இரவில் துாக்கம் வரவில்லை. எல்லா உயிர்களும் முருகனின் குழந்தைகளாயிற்றே. அவர் எப்படி துாங்குவார், துாங்கத்தான் நேரம் ஏது?” என்றார் வாரியார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us