தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/வாட்ச் கட்டும் கடவுள்

வாட்ச் கட்டும் கடவுள்

வாட்ச் கட்டும் கடவுள்


ADDED : மே 07, 2026 09:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 09:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குஜராத் மாநிலம் கர்பூர் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழமையான சுவாமி நாராயண் கோபிநாத் கோயிலில் கிருஷ்ணர் கையில் வாட்ச் அணிந்திருக்கிறார். இதன் பின்னணியில் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள்.

ஐம்பது ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் ஒருவர் இங்கு வந்தார். அவரிடம் அர்ச்சகர் இங்குள்ள கிருஷ்ணர் சிலை உயிரோட்டமானது என்றார்.

அப்போது ஆங்கிலேயர் தன் கை கடிகாரத்தை காட்டி, ''உடம்பின் நாடி துடிப்பால் ஓடும் வாட்ச் இது. கிருஷ்ணர் கையில் இதைக் கட்டுவோம். அப்போதும் வாட்ச் ஓடினால் நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன்'' என்றார். கையில் இருந்து வாட்சை கழற்றினார். அது நின்று போனது.

அப்படியே அதை கிருஷ்ணர் கையில் கட்டினார் அர்ச்சகர். ஓட ஆரம்பித்தது.

இன்றும் கிருஷ்ணர் கையில் இந்த வாட்ச் உள்ளது. தினமும் அலங்காரம் செய்யும் போது அர்ச்சகர் வாட்சை கழற்றி மறுபடியும் அணிவிப்பார். கழற்றும் போது நிற்கும் வாட்ச், கிருஷ்ணருக்கு அணிவிக்கும் போது ஓடத் தொடங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us