தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/73 கோயில் கட்டியவர்

73 கோயில் கட்டியவர்

73 கோயில் கட்டியவர்


ADDED : ஜூலை 09, 2026 10:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 10:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழநாட்டை சுபதேவ மன்னர் ஆட்சி செய்தார். அவரது மனைவி கமலவதி. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அப்போது அரண்மனை ஜோதிடர், ''உங்களுக்கு இன்னும் சில நிமிடத்தில் குழந்தை பிறந்து விடும். நீங்கள் ஒரே ஒரு நாழிகை (24 நிமிடம்) வலி பொறுத்து, குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது நல்ல நேரம் பிறக்கிறது. அந்த நேரத்தில் பிறந்தால் உலகம் போற்றும் ஆன்மிகவாதியாக வாழ்வான்” என்றார்.

பிரசவ வேதனையிலும் ஒரு கயிறை எடுத்துவரச் சொல்லி தன்னை தலைகீழாக கட்டிப்போடச் சொன்னாள் கமலவதி. அதன்படியே பணிப்பெண்களும் செய்தனர். தலைகீழாக தொங்கிய அந்த புண்ணியவதியை நல்ல நேரம் வந்ததும் கீழே இறக்கினர். குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் சிவபக்தராக விளங்கிய கோச்செங்கட்சோழன். சிவன் கோயில்களின் நாயன்மார் வரிசையில் இவருக்கு சன்னதி இருக்கும். இவருடைய ஆட்சிக் காலத்தில் 70 சிவன் கோயில்கள், 3 பெருமாள் கோயில்கள் கட்டப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us