தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தனியாக நின்றது ஏன்

தனியாக நின்றது ஏன்

தனியாக நின்றது ஏன்


ADDED : ஜூலை 23, 2026 08:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 08:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமரின் ஆயுட்காலமான பதினொரு ஆயிரம் ஆண்டுகள் முடிந்தது. அவர் மீண்டும் தன் இருப்பிடமான வைகுண்டம் திரும்ப தயாரானார். இதற்காக அயோத்தியில் பாயும் சரயு நதிக்குள் இறங்க, தன்னுடன் வந்த அனைவரையும் சேர்த்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது ராமனோடு வர விரும்பாமல் ஹனுமன் மட்டும் தனியாக நின்றார்.

ராமர், 'நீ வரவில்லையா?' எனக் கேட்டார். அதற்கு ஹனுமன், ''வைகுண்டத்தில் அமிர்தம், ஆனந்தம், சுகானுபவம் எல்லாம் இருந்தாலும் ராமநாமம் கேட்க வாய்ப்பில்லை. ராம நாமம் இல்லாத வைகுண்டத்தை விட பூலோகத்தில் வாழ்வதே மேலானது. பூமியில் நிரந்தரமாக தங்கி நலம் தரும் ராமநாமத்தைச் சொல்லப் போகிறேன்'' என்றார். அதனால், இன்றும் ராமாயண பாராயணம் செய்யும் போது ஒரு பலகையை வைப்பர்.

கண்ணுக்குத் தெரியாமல் சூட்சும வடிவில் ஹனுமன் அதில் அமர்வதாக ஐதீகம். துாதனாக, வீரனாக, மதியுக மந்திரியாக விளங்கினாலும், ராமரின் திருவடியை தாங்கி நிற்பதில் தான் அவருக்கு மகிழ்ச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us