ADDED : அக் 22, 2026 12:51 PM

அ நிறம் | அளவு
'கடவுளைக் காட்ட முடியுமா' என ஆத்திகன் ஒருவனிடம் கேட்டான் நாத்திகன். சைக்கிளைக் காட்டிய ஆத்திகன், “இந்த டயர் எப்படி ஓடுகிறது?” எனக் கேட்டான்
''காற்றால் தான்... டயரில் காற்று இருந்தால் ஓடி விட்டுப் போகிறது”.
''சரி...டயர் என்னும் ஜடப்பொருள் தெரிகிறது. ஆனால் அதில் இருக்கும் காற்று தெரிகிறதா?”
“தெரியாதே... அது உடம்பின் மீது பட்டால் மட்டுமே நம்மால் உணர முடியும்''
'' அவர் அப்படித் தான்! கண்ணுக்கு தெரிய மாட்டார். கடவுளின் இருப்பை நம்மால் உணர மட்டுமே முடியும். அவரால் தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது'' என்றான் ஆத்திகன்.
